சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடக்கும் மீட்டிங்....! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் 'அந்த' முக்கிய முடிவுகள்!!!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெறும் உயர்மட்ட தொழில்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முதலீடுகள், புதிய தொழில்கொள்கை, உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி, புதிய முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மையமாகக் கொண்டு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையை நிர்ணயிக்கும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தொழில்துறை முன்னேற்றம் குறித்து விரிவான ஆலோசனை
அண்மைக் காலமாக தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள மந்தநிலை குறித்து பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடுகள் தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: உச்சக்கட்ட எதிர்பார்பில் மக்கள்! மகளிர் உரிமைத்தொகையில் தமிழக அரசு அதிரடி மாற்றம்.! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!!!
மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்து வரும் Guidance Tamil Nadu நிறுவனத்தில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து விலகியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதிய தொழில் கொள்கைகள் உருவாக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றக் குறைபாடுகளும் ஆலோசனையின் முக்கிய அம்சங்களாக இருக்க உள்ளன.
புதிய தொழில்கொள்கைக்கு ஒப்புதல் கிடைக்குமா?
ஐடி மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான புதிய கொள்கைகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் சவால்கள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்குத் தீர்வாக புதிய Integrated Industrial Policy வரைவு இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு
சென்னையின் புதிய சர்வதேச விமான நிலையத் திட்டம், முக்கிய நெடுஞ்சாலை மற்றும் மேம்பாலப் பணிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் நிர்வாக மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் எஃப்எஸ்ஐ விதிமுறைகள் திருத்தம், ஒற்றைச்சாளர அனுமதி முறை, தொழிற்சாலைகளுக்கான தடையற்ற மின்சார வசதி உள்ளிட்ட விவகாரங்களிலும் விரைவான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் முக்கிய உத்தரவுகளை வழங்கலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கவே இல்லையே! நயினார் நாகேந்திரனுக்கு புதிய பதவி...! தமிழக பாஜகவில் அடுத்த அதிரடி மாற்றம்..!!!