உச்சக்கட்ட எதிர்பார்பில் மக்கள்! மகளிர் உரிமைத்தொகையில் தமிழக அரசு அதிரடி மாற்றம்.! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!!!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்த தமிழக அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது. பட்ஜெட்டுக்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தும் பணிகள் வேகமெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தற்போதைய பயனாளிகள் மட்டுமல்லாமல் புதிதாக விண்ணப்பிக்க காத்திருக்கும் பெண்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்தத் திட்டம் முழுமையாக எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துவரும் நிலையில், புதிய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகே முக்கிய நிதி முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்களே ரூ. 2000.... புதிதாக மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டுமா.? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!
பட்ஜெட்டுக்குப் பிறகே முக்கிய அறிவிப்பு?
தகவலின்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், திட்டத்தில் புதிதாக யாரெல்லாம் சேர்க்கப்படலாம் என்பது குறித்த வழிகாட்டுதல்களும் அதன்பின்னரே வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், புதிய பயனாளிகள் சேர்க்கை மற்றும் தொகை உயர்வு தொடர்பாக அரசின் அடுத்த கட்ட அறிவிப்பை பெண்கள் கவனமாக எதிர்நோக்கி வருகின்றனர்.
பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
மாதந்தோறும் வழங்கப்படும் உரிமைத்தொகை பல குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளுக்கு உதவியாக இருந்து வருகிறது. தற்போது ₹2,500 ஆக உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு காணப்படுகிறது.
அதேசமயம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை வதந்திகளை நம்பாமல் பொறுமையாக காத்திருக்குமாறு அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய பயனாளிகள் யார்?
தற்போது திட்டத்தில் இடம்பெறாத தகுதியுள்ள பெண்களும் புதிய பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இருப்பினும், இதுகுறித்த இறுதி முடிவு மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்து அரசு இன்னும் தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.
இதையடுத்து, ₹2,500 உரிமைத்தொகை திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!