Chennai: இணைபிரியா தோழிகள் விபத்தில் ஒருசேர பலியான சோகம்.. சாப்பிடச்சென்றபோது துயரம்..!
Chennai News: கல்லூரி மாணவிகள் கார் மோதி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
நள்ளிரவு 1 மணியளவில் உணவு சாப்பிட கடைக்குச் சென்ற தோழிகள் விபத்தில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
மாணவிகள்:
சென்னையில் உள்ள கூடுவாஞ்சேரி, தைலாவரம், காமராஜர் தெருவில் வசித்து வருபவர் நல்லகண்ணு. இவரின் மனைவி லட்சுமி. தம்பதிகளின் மூத்த மகள் ராஜாத்தி (வயது 19). அங்குள்ள நந்திவரம், மகாலட்சுமி நகர், 16 வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் அப்துல் கலீம். இவரின் மனைவி பாத்திமா. தம்பதிகளின் மூத்த மகள் அலிஷா நிலோபர் (வயது 19). இவர்கள் இருவரும் காட்டாங்குளத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பிபிஏ 3 ம் ஆண்டு பயின்று வந்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிவேகமாக வந்த கல்லூரி பேருந்து.. அலட்சியமாக சாலையை கடந்த கல்லூரி மாணவிகள்.. துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்..!
தோழிகள்:
இவர்கள் இருவரும் இணைபிரியாத தோழிகளாக இருந்துள்ளனர். இதனிடையே, இருவரும் நேற்று முன்தினம் இரவில், சுமார் 1.15 மணியளவில், தைலாவரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி பயணம் செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் இவர்கள் உணவு சாப்பிட சென்றதாக கூறப்படுகிறது. இவர்களின் வாகனம் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலையில் சென்றுள்ளனர். அச்சமயம், பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று, இவர்களின் மீது மோதியது.
விபத்து:
இந்த விபத்தில் இவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், ராஜாத்தி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அலிஷா உயிருக்காக போராடிய நிலையில், அக்கம்-பக்கத்தினர் மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை:
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மாணவிகளின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்தியதாக கார் ஓட்டுநர் சதீஷ் (வயது 24) கைது செய்யப்பட்டார். இவர் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இணைபிரியாத தோழிகளான இருவரும் விபத்தில் உயிரிழந்தது இருதரப்பு குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிவேகத்தில் எமனாக வந்த சிறுவன்.. ஆம்னி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நொடியில் நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி.!