×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மிதக்கப்போகும் தலைநகரம்.. போட்டுத்தாக்கப்போகும் எல்நினோ.. சென்னைவாசிகளே உஷார்.! 

Chennai Rains: சென்னையில் நடப்பு ஆண்டில் பெருமழை காத்திருக்கிறது. 

Advertisement

2026ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்பதை எல்நினோ உறுதி செய்துள்ளது.   

உறுதி: 

Chennai Weather Alert: பசுபிக் பெருங்கடலில் உருவாகி இருக்கும் எல்நினோ விளைவு காரணமாக தென்மேற்குப்பருவமழை, வடகிழக்குப்பருவமழை மற்றும் 2027ம் ஆண்டின் குளிர்காலம் வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் உறுதி செய்துள்ளது. 

இதையும் படிங்க: காலையிலேயே வந்த அலர்ட்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுக்கும் மழை.. 8 மாவட்டங்கள் உஷார்.!

எச்சரிக்கை: 

2027 மார்ச் மாதம் வரையில் எல்நினோ நீடிக்க 98% வரை வாய்ப்புகள் இருக்கிறது. இந்த காலநிலை காரணிகள் கடந்த ஜூன் மாதமே நிலைபெற்றுவிட்ட நிலையில், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் வலுவான எல்நினோவாக இது மாற்றம் அடையும் என உலக வானிலை அமைப்பும் எச்சரித்துள்ளது. 

பலவீனம்: 

இந்த அமைப்பின் அறிக்கையில் சென்னை, தமிழ்நாட்டின் மழை காரணிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் கடுமையான வெப்பஅலை, கடலோரத்தில் புழுக்கம் நீடிக்கிறது. இந்த விஷயத்துக்கு பலவீனம் கொண்ட தென்மேற்குப்பருவமழை காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கத்தைவிட குறைவு: 

அரபிக்கடலில் ஈரப்பத காற்று குறைந்து வறண்ட சூழல் உருவாகியுள்ள நிலையில், தென்மேற்குப்பருவமழை காலம் வழக்கத்தை விட குறைவாகும். 1987 ம் ஆண்டுக்குப்பிவ் அந்த 9 எல்நினோ ஆண்டுகளில் 8 ஆண்டுகளில் சென்னைக்கு மழை குறைவு ஆகும். அதே நேரத்தில், வடகிழக்கு பருவமழையின்போது சென்னை, தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மழை இருக்கும். முந்தைய தரவுகளும் எல்நினோ வலுவாக இருக்கும் காலங்களில் இங்கு மழை அதிகம் பெய்ததை உறுதி செய்துள்ளது. 

இதையும் படிங்க: கைவிரித்த இயற்கை.. இந்தியாவுக்கே இந்த ஆண்டு எமகண்டம்.. தமிழகத்துக்கும் வந்த ஷாக் ரிப்போர்ட்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Rains #El Nino Effect #Northeast Monsoon #எல்நினோ சென்னை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story