கைவிரித்த இயற்கை.. இந்தியாவுக்கே இந்த ஆண்டு எமகண்டம்.. தமிழகத்துக்கும் வந்த ஷாக் ரிப்போர்ட்..!
Tamilnadu Weather June Prediction: Wea
தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டில் இந்தியாவில் ஏமாற்றத்தை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூனில் தமிழ்நாட்டுக்கு வெப்ப அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எல்நினோ விளைவு:
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. ஜூன் 01 முதல் செப்டம்பர் 01 வரை இந்தியாவில் தென்மேற்கு பருவமழை என குறிப்பிடப்படும் நிலையில், இதனால் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். இந்நிலையில், எல்நினோ விளைவு காரணமாக இந்தியாவில் நடப்பு ஆண்டில் மழை குறையும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் விளாசப்போகும் மழை.. இன்று எங்கெல்லாம் விடுமுறை?.!
மழை அளவு குறையும்:
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 94% மட்டுமே மழைக்கான வாய்ப்பு எனவும், மானாவாரி பயிரிடும் பகுதிகளிலும் மழை இயல்பைவிட குறைவாகவே இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் குறைவான அளவே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், நடப்பு ஆண்டில் காவேரி நீர் வரத்தும் சந்தேகம் ஆகி இருக்கிறது.
வெப்பம் அதிகமாகும்:
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஜூன் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்திலும் சென்னை உட்பட தமிழக மாவட்டங்களில் வெப்பம் அதிகம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பைவிட ஜூனில் வெப்பம் அதிகம் இருக்கலாம். ராமநாதபுரத்தில் வெப்பம் கடுமையாக இருக்கும்.
ஜூனில் வெப்ப அலை எச்சரிக்கை:
வெப்ப அலைக்கான வாய்ப்புகளும் வடகடலோர மாவட்டங்கள், அதனையொட்டிய உள்மாவட்டங்களில் இருக்கும் என எதிர்பார்ப்படுகிறது. அதிகபட்சமாக 3 நாட்கள் வரையில் வெப்ப அலை வீசலாம். ஜூன் மாதத்தின் இயல்பை விட வெப்பம் அதிகம் இருக்கும். தென்மேற்கு பருவமழை ஜூனில் தொடங்கினாலும், அது தென்மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மட்டும் இருக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே மாதத்தை போலவே ஜூனில் வெப்பம் போட்டுத்தாக்கும்.
இதையும் படிங்க: தமிழக மக்களே தயாரா.? முன்கூட்டியே ஆஜராகும் வருண பகவான்.. விவசாயிகள் மகிழ்ச்சி.!