×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் பழக்கத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. பரபரப்பு பின்னணி.!

Chennai Thiruverkadu News: பெண் வீடுபுகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் சென்னை திருவேற்காடு பகுதியில் நடந்துள்ளது.

Advertisement

திருவேற்காடு பகுதியில் பெண் கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

வீடுகட்டும் பணிகள்:

சென்னையில் உள்ள ஆவடி, மேல்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ரஜினி (வயது 40). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில், பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி கலைபவானி (வயது 35). தம்பதிகளுக்கு 18 வயதுடைய மகன், 15 வயதுடைய மகள் இருக்கின்றனர். ரஜினி திருவேற்காடு, காடுவெட்டி பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி வந்துள்ளார். ரஜினி பூ வியாபாரத்துக்கு செல்வதால், கலைபவானி வீடு கட்டும் பணிகளை கவனித்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!

கள்ளக்காதல்:

அப்போது, துணி அயர்ன் கடை வைத்து நடத்தி வந்த முருகன் (வயது 36) என்பவர், கட்டுமான பணிக்கு தேவையான ஒருசில உதவிகளை செய்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் முடிந்து ஆண், பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

வாக்குவாதம் & கொலை:

இந்நிலையில், வீடு கட்டி முடிக்கப்பட்டபின், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக புதுமனை புகுவிழா நடைபெற்றுள்ளது. அங்கேயே ரஜினி குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். இதன்பின்னர் கலைபவானி முருகனிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் கலைபவானியிடம் சண்டையிட்டு இருக்கிறார். இதனால் வாக்குவாதமும் நடந்துள்ளது. இதனிடையே, சம்பவத்தன்று கலைபவானியின் வீட்டுக்கு முருகன் சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை:

வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து முருகன் கலைபவானியை சரமாரியாக வெட்டிய நிலையில், பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில், முருகன் பக்கத்து வீட்டின் மாடிக்கு தப்பிக்குதிக்க முயற்சி செய்துள்ளார். மாடியில் இருந்து தவறி விழுந்த முருகன் எலும்பு முறிவால் துடித்துள்ளார். பின் அவரை பிடித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முருகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: மனைவி வெளியே போன கேப்பில் கள்ளக்காதலியுடன் ஜல்சா.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக்கொலை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Thiruverkadu #திருவேற்காடு #கள்ளக்காதல் கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story