×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மர்ம சூட்கேஸ்ஸில் வீசிய துர்நாற்றம்! துண்டு துண்டாக வெட்டி கிடந்த ஆணின் சடலம்! கணவனா? காதலனா? சென்ட்ரல் சிசிடிவியில் சிக்கிய அந்த காட்சி...!!!

சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மர்ம சூட்கேஸில் துண்டிக்கப்பட்ட ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிசிடிவி ஆதாரங்களை வைத்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

சென்னையிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மர்மமான சூட்கேஸில் ஆண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இந்த தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

துர்நாற்றம் வீசிய சூட்கேஸில் உடல் கண்டுபிடிப்பு

ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நின்றிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற சூட்கேஸில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் தகவல் அளித்ததையடுத்து, ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பெட்டியைத் திறந்து பார்த்தனர். அதில் ஆண் ஒருவரின் உடல் துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. மேலும், அந்த உடல் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையின் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவிக்கு உதவி செய்ய வந்த இடத்தில்.... டார்ச்சல் செய்த இளம்பெண்! கணவனை வளைத்து போட்ட கொடூரம்! ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி சம்பவம்!!!

சிசிடிவியில் சிக்கிய ஆண், பெண்

இதையடுத்து ஆக்ரா போலீசார், சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் அந்த சூட்கேஸை ரயிலுக்குள் கொண்டு வந்து வைத்துவிட்டு வெளியேறியது பதிவாகியிருந்தது. அதன்பின் அவர்கள் சென்னை பூங்கா ரயில் நிலையத்துக்குச் சென்று, வேறொரு ரயிலில் ஏறிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தடயங்களை வைத்து தீவிர விசாரணை

சூட்கேஸில் இருந்த ஜவுளிக்கடை பிளாஸ்டிக் கவர், ரசீதுகள் மற்றும் பில்களை முக்கிய தடயங்களாகக் கொண்டு, உயிரிழந்த நபரின் அடையாளத்தை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில், உடலை ரயிலில் அனுப்பி வைத்தவர்கள் யார், கொலைக்கான பின்னணி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 'ஜனநாயகன்' கொடுத்த விழிப்புணர்வு.. சிக்கிய குற்றவாளி.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Nadu Express #சென்னை ரயில் #Agra Railway Police #சூட்கேஸ் கொலை #CCTV investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story