கடந்த வருடம் 6 வயது குழந்தை... இப்போ மனைவி! அடங்காத வெறியால் ஜாமீனில் வெளியே வந்து கணவன் செய்த பயங்கரம்! வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!!
சென்னையில் தனியார் வங்கியில் பணியாற்றிய பெண் கேஷியர் ரெபேக்காவை அவரது கணவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாமீனில் வெளியே வந்த நிலையில் பழிவாங்கும் நோக்கமே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்த ரெபேக்கா மீது வங்கிக்குள்ளேயே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் உடனடியாக தாக்குதலாளியை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் ரெபேக்காவின் கணவர் என்பதும் தெரியவந்துள்ளது.
வங்கிக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 27 வயதான ரெபேக்கா, கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 31 மாலை, வாடிக்கையாளர் போல வங்கிக்குள் நுழைந்த நபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ரெபேக்காவை சரமாரியாக வெட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் தாக்குதலாளியைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: 4 மாசமா அப்படி ஒரு வேஷம் போட்டு கடைக்கு வந்த 50 வயது பெண்! இறுதியில் கடை முதலாளிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி....!!
விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பின்னணி
போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர் ரெபேக்காவின் கணவர் சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் குடும்பத் தகராறு, சந்தேகம் மற்றும் சதீஷ்குமாரின் மதுப் பழக்கம் காரணமாக அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், அதன்பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தகவலின்படி தெரியவந்துள்ளது.
ஜாமீனில் வெளியே வந்ததும் கொலை முயற்சி
கடந்த ஆண்டு, 6 வயது மகளை நீதிமன்றம் தாயிடம் ஒப்படைத்துவிடும் என்ற அச்சத்தில் குழந்தையை கொலை செய்த வழக்கில் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டமும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த அவர், பழிவாங்கும் நோக்கத்துடன் வங்கிக்குச் சென்று மனைவியை கொல்ல முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: உன்னுடைய போதைக்கு பொண்டாட்டி, புள்ள ஊறுகாய்யா.... 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்...! சிவகாசியில் நடந்த அதிர்ச்சி....!!!