#Breaking: காலையிலேயே மரண செய்தி.. அரசு பேருந்து - வேன் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. இருவர் பலி.!
செங்கல்பட்டு கல்பாக்கம் அருகே அரசு பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது.
செங்கல்பட்டு கல்பாக்கம் அருகே அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஆலத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி சென்ற வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வேனில் பயணம் செய்த தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரசு பேருந்து - வேன் மோதி விபத்து:
மேலும் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் உமா (வயது 40), பானு (வயது 24) என தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: சிவகங்கை: அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. இரத்த வெள்ளத்தில் கதறிய பயணிகள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!
சிவகங்கை விபத்து:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே நேற்று அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தற்போது காலையிலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.