×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிவகங்கை: அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. இரத்த வெள்ளத்தில் கதறிய பயணிகள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!

திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலியாகினர்.

Advertisement

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பான அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே நேற்று அரசு பேருந்து பயங்கர விபத்தில் சிக்கியது. காரைக்குடி நோக்கி பயணம் செய்த அரசு பேருந்தும், திண்டுக்கல் நோக்கி பயணம் செய்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில் வாகனத்தை இயக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனர், 9 பெண்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்புகள் உயரும் அபாயம்:

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. கடந்த வாரம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்த சோகம் நடந்துள்ளது.

நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்:

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மேலும் சிவகங்கை விபத்து தொடர்பான அதிர்ச்சி வீடியோக்களும் இணையத்தில் வெளிவந்து காண்போரை கண்கலங்க வைத்துள்ளனர். 

சிவகங்கை விபத்து தொடர்பான வீடியோ (Sivaganga Govt Bus Accident Video):

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sivaganga Bus Accident #சிவகங்கை #விபத்து #அரசு பேருந்துகள் #accident #Govt bus accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story