×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த வாரம் திருமணம்.. தந்தை கண்முன் தலை நசுங்கி உயிரிழந்த மகள்.. கலங்கவைக்கும் சோகம்.! 

Chennai News: தந்தை கண்முன் மகள் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். 

Advertisement

மருத்துவமனைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

திருமணம் நிச்சியிக்கப்பட்ட பெண்: 

சென்னையில் உள்ள எண்ணூர், ராமகிருஷ்ணா நகர், ஒன்றாவது தெருவில் வசித்து வருபவர் மகேந்திரன். இவரின் மகள் திருவளர் செல்வி (வயது 21). பெண்மணி பி.காம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். அடுத்த வாரம் திருமணம் நடைபெற நிச்சயமும் நடைபெற்றுள்ளது. 

இதையும் படிங்க: லிப்ட் அறுந்து விழுந்து சோகம்.. 70 வயது மூதாட்டி தலை நசுங்கி பரிதாப பலி.!

உடல்நிலை சரியில்லை: 

இதனிடையே, தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அவருடன் இருசக்கர வாகனத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு உதவியாக இருந்துள்ளர். பின் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர். 

விபத்து: 

வாகனத்தை மகேந்திரன் இயக்கிய நிலையில், திருவெற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகில் சென்றபோது, இவர்களுக்கு பின்னால் வந்துகொண்டு இருந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், செல்வியின் தலையில் லாரி சக்கரம் ஏறி-இறங்கியது. 

மரணம்: 

இந்த சம்பவத்தில் தந்தையின் கண்முன் மகள் தலைநசுங்கி உயிரிழந்தார். மகேந்திரன் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், லாரி ஓட்டுநரான திருவெற்றியூரை சேர்ந்த சரவணனை (வயது 28) கைது செய்தனர். 

இதையும் படிங்க: ஆடி மாதத்தில் ஊருக்குச் சென்ற மனைவி.. பக்கத்து வீட்டுப்பெண் மீது ஆசைப்பட்ட கணவர்.. அடுத்து நடந்த பயங்கர சமபவம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #accident #marriage #father daughter
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story