×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதலில் புருஷன்.... அடங்காத வெறி! அடுத்து தூங்கிய 4 வயது மகன்... வீட்டிற்கு நண்பரை வர சொல்லி இளம்பெண் செய்த பயங்கரம்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்...!!!

பெங்களூருவில் கணவன் மற்றும் 4 வயது மகன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மனைவி, அவரது நண்பர் மீது போலீசார் சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பெங்களூரு சிக்கபானவரா குட்டே பசவேஸ்வர நகர் பகுதியில் 34 வயதான அபினந்தன் மற்றும் அவரது 4 வயது மகன் யதுவீர் ஆகியோர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். திங்கள்கிழமை அதிகாலை நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். அபினந்தனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணவன்-மனைவி இடையே தகராறு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அபினந்தனுக்கும் அவரது மனைவி ஹரிணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அப்போது சமையலறையில் இருந்த கரண்டியால் ஹரிணி, அபினந்தனை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆடி மாசம் ஊருக்குப்போன பொண்டாட்டி! கீழ் வீட்டுப் பெண்ணிடம் கணவன் காட்டிய சில்மிஷம்! ஆசை வார்த்தை கூறி நண்பி வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி...! சென்னையில் நடந்த பயங்கரம்!!!

நண்பரை வரவழைத்து கொலை செய்ததாக சந்தேகம்

தகராறுக்குப் பிறகு ஹரிணி தனக்கு நெருக்கமான வினய் என்பவரை வீட்டிற்கு வரவழைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் சேர்ந்து அபினந்தனை தாக்கி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்த அவரது 4 வயது மகன் யதுவீரையும் மூச்சுத்திணறடித்து கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு

கொலைக்குப் பிறகு வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்ததுடன், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் செயலிழக்கச் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் திட்டமிட்டு தடயங்களை மறைக்க முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியச் சந்தேக நபராக கருதப்படும் வினய் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்! தூங்கி கொண்டிருந்த இளைஞர்கு நேர்ந்தது பயங்கரம்.... அலறி துடித்த பெற்றோர்! குலை நடுங்க வைக்கும் சம்பவம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பெங்களூரு கொலை #Bengaluru murder #கணவன் மனைவி தகராறு #4 வயது குழந்தை #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story