திருச்சியில் சோகம்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.!! பரிதாபமாக பலியான டிரைவர்.!!
திருச்சியில் சோகம்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.!! பரிதாபமாக பலியான டிரைவர்.!!

திருச்சியில் சரக்கு லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர.
ஆட்டோ ஓட்டுநர் அம்ருதீன்
திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள ஓத்த மினார் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அம்ருதீன. இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று அம்ருதீன் தென்னூர் பகுதியைச் சேர்ந்த நியாஸ் மற்றும் அப்துல் கரீம் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஓலையூர் பகுதிக்கு சவாரிக்கு சென்றிருக்கிறார்.
சரக்கு லாரியுடன் ஆட்டோ மோதி விபத்து
இவர்கள் சென்ற ஆட்டோ ஓலையூர் நான்கு சந்திப்பு பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுனர் அம்ருதீனுக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ அங்கே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் ஓட்டுநர் அம்ருதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் சென்ற அப்துல் கரீம் மற்றும் நியாஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு ஜிம் மரணம்... பயிற்சியாளரால் பறி போன உயிர்.? இளைஞருக்கு நேர்ந்த சோக முடிவு.!!
காவல்துறை விசாரணை
இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் விபத்தில் மரணமடைந்த அம்ருதீன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காயமடைந்த நியாஸ் மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 6 வயது சிறுவன் பலாத்காரம்... 31 வயது நபருக்கு இரட்டை ஆயுள்.!! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!