தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் ஒரு ஜிம் மரணம்... பயிற்சியாளரால் பறி போன உயிர்.? இளைஞருக்கு நேர்ந்த சோக முடிவு.!!

மீண்டும் ஒரு ஜிம் மரணம்... பயிற்சியாளரால் பறி போன உயிர்.? இளைஞருக்கு நேர்ந்த சோக முடிவு.!!

chennai-35-year-old-gym-boy-dies-in-liver-failure-stero-LCH8U6 Advertisement

சென்னையில் ஜிம்முக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஜிம் பயிற்சியாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மரணமடைந்த இளைஞரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜிம்முக்கு சென்ற இளைஞர்

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராம்கி. 35 வயதான இவர் தனது உடலை மெருகேற்றி பாடி பில்டர்களைப் போல ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னையிலுள்ள ஸ்வெட் ஜிம் என்ற உடற்பயிற்சி கூடத்திற்கு கடந்த 6 மாதங்களாக சென்று வந்திருக்கிறார். மேலும் தனது உடலை கட்டுமஸ்தானாக மாற்றுவதற்கு அங்குள்ள ஜிம் ட்ரைனர் தினேஷ் சந்திரமோகன் என்பவரிடம் அறிவுரை கேட்டதாகவும் தெரிகிறது.

tamilnadu

தவறான அறிவுரையால் கல்லீரல் பாதிப்பு

இதனைத் தொடர்ந்து ராம்கியை ஸ்டெராய்டு ஊசிகள் எடுத்துக் கொள்ள பரிந்துரைத்திருக்கிறார் ஜிம் பயிற்சியாளர் தினேஷ் சந்திரமோகன். அவருடைய வழிகாட்டுதலின்படி ஊசி எடுத்துக்கொண்ட ராம்கிக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்திருக்கிறார் ராம்கி.

இதையும் படிங்க: 6 வயது சிறுவன் பலாத்காரம்... 31 வயது நபருக்கு இரட்டை ஆயுள்.!! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

மரணமடைந்த ராம்கி

மேலும் ராம்கிக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு தீவிரமடைந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ராம்கிக்கு தவறான வழிகாட்டுதலை வழங்கிய ஜிம் பயிற்சியாளர் தினேஷ் சந்திரமோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது உறவினர்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜிம் பயிற்சியாளரின் தவறான வழிகாட்டுதலால் இளைஞர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: செந்தூர் கோவிலுக்குச் சென்ற தாய், 5 வயது மகன் விபத்தில் சிக்கி பலி.. கண்ணீரில் உறவினர்கள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #chennai #Crime #Gym Boy Dead #Liver Failure #Steroid Side Effects
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story