குட் டச், பேட் டச் விழிப்புணர்வு நிகழ்ச்சியால் 5 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த கொடூரம்! 3 ஆம் வகுப்பு மாணவியிடம் வெளியே சொன்னா கொன்றுவேன்... மாணவியை கண்டு மிரண்டு போன அரக்கன்..!!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பள்ளியில் நடைபெற்ற 'குட் டச், பேட் டச்' விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பிறகு, 8-ம் வகுப்பு மாணவி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் வன்கொடுமையை வெளிவந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற 'குட் டச், பேட் டச்' விழிப்புணர்வு நிகழ்ச்சி, பல ஆண்டுகளாக மறைந்திருந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஆசிரியையின் விழிப்புணர்வு வகுப்பால் தைரியம் பெற்ற 8-ம் வகுப்பு மாணவி, சிறுவயதில் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விழிப்புணர்வு வகுப்பில் வெளிப்பட்ட அதிர்ச்சி தகவல்
பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பிறகு, 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியையிடம் கண்ணீருடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு, 3-ம் வகுப்பு படித்தபோது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த தன்னை, அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (42) என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 17 வயது மாணவிக்கு தவெக நிர்வாகி செய்த கொடூரம்! டிஎன்ஏ டெஸ்ட்டில் அம்பலமான உண்மை... போலீஸ் அதிரடி கைது!!!
ஆசிரியையின் நடவடிக்கையால் தொடங்கிய விசாரணை
ஐந்து ஆண்டுகளாக அச்சத்தில் யாரிடமும் எதையும் கூற முடியாமல் இருந்த மாணவி, ஆசிரியையின் ஊக்கத்தால் உண்மையை வெளிப்படுத்தினார். இதையடுத்து ஆசிரியை உடனடியாக மாணவியின் தாயாருக்கு தகவல் அளித்தார். பின்னர் மாணவியின் தாயார் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போக்சோ சட்டத்தில் கைது
விசாரணையின் அடிப்படையில், கொசப்பாளையம் முனுசாமி தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஐயப்பனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளிகளில் நடைபெறும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மறைந்து கிடக்கும் குற்றங்களை வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் தைரியமாக புகார் அளிக்கவும் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை இந்த வழக்கு மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்ஏ டெஸ்ட்டில் சிக்கிய தவெக நிர்வாகி: சத்தியமங்கலத்தில் அம்பலமான பகீர் உண்மை.. 17 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.!