85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. 35 வயது இளைஞரின் பதறவைக்கும் செயல்.!
Erode News: மூதாட்டியை வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
மூதாட்டி:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பெருமாபாளையம், கொம்புத்தூக்கி அம்மன் கோயில், கரும்பாறை தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பன். இவரின் மனைவி பழனியம்மாள் (வயது 85). கணவரை இழந்த பழனியம்மாள், தோட்டத்து வீட்டில் தனியே வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை.. 20 பேர் கும்பல் பரபரப்பு செயல்.. கடலூரில் பயங்கரம்.!
பாலியல் வன்கொடுமை:
இவரின் மகன், மகளுக்கு திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்துடன் வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி:
இதனால் மூதாட்டி மயங்கிய நிலையில், காலையில் பக்கத்து தோட்டக்காரர்களிடம் தனக்கு நேர்ந்ததை கூறி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் மூதாட்டியின் மகன், மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின் இதுதொடர்பாக அந்தியூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை:
நேரில் வந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மூதாட்டியின் தோட்டம் அருகே தனபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணிக்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 31) மூதாட்டியை வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
கைது:
இதனையடுத்து, அவரை அதிரடியாக தேடிய அதிகாரிகள், சொந்த ஊர் செல்ல அந்தியூர் பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த நபரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதலி தற்கொலை செய்த சோகத்தில், கள்ளக்காதலன் விபரீதம்.. ஷாக் பின்னணி.!