கை-கால்களை கட்டி கொடூரம்.. 70 வயது மூதாட்டிக்கு நள்ளிரவில் பயங்கரம்.. சென்னையில் ஷாக்.!
Ambattur Murder: வீட்டில் தனியே இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சோகம் அம்பத்தூரில் நடந்துள்ளது.
நகைகளை கொள்ளையடிக்க மூதாட்டியை கொலை செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது.
சென்னையில் உள்ள அம்பத்தூர், சூரப்பட்டு, துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் பொன்னம்மாள் (வயது 70). இவர் கப்பல் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவருக்கு 6 மகள்கள் இருக்கின்றனர்.
நள்ளிரவில் நடந்தது:
இவர்கள் ஆறு பேருக்கும் திருமணம் முடிந்து கணவர்-குழந்தைகளுடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள். இதனிடையே, நேற்று நள்ளிரவு நேரத்தில் பொன்னம்மாள் வீட்டுக்கு வருகை தந்த மர்ம நபர்கள், சிறிது நேரம் கழித்து அவசர அவசரமாக அதே ஆட்டோவில் சென்றுள்ளனர். மேலும், அப்பகுதியில் விபத்து ஒன்றையும் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: கூலித்தொழிலாளிக்கு எமனான அந்த ஒரு விஷயம்.. கோயிலில் நடந்த கொடூர சம்பவம்.!
அரங்கேறிய கொலை:
இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, பொன்னம்மாளிமுகம், கண்களில் காயம் இருந்தது. அவரின் கைகள் துணியால் கட்டப்பட்டு சுயநினைவின்றி இருந்துள்ளார். உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து பரிசோதித்துவிட்டு மூதாட்டியின் மரணத்தை உறுதி செய்தனர்.
காவல்துறை விசாரணை:
இதனிடையே, தகவல் அறிந்து உறவினர்களும், புதூர் காவல்துறையினரும் நேரில் வந்தனர். அதிகாரிகள் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளை அரங்கேறி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. மூதாட்டிக்கு சொந்தமாக சூரப்பட்டு பேருந்து நிலையம் அருகில் ஒன்றரை கோடி மதிப்புடைய சொத்து இருப்பதால், சொத்துக்காக கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பயங்கரம்.. வயலில் நடந்தது என்ன? கிருஷ்ணகிரியை அதிரவைக்கும் கொடூரம்.!