×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கிழட்டு காமுகனின் அதிர்ச்சி செயல்.. யூடியூப் பார்க்க வைத்து பாலியல் தொல்லை.. 3 ஆண்டுகளாக கொடுமை..!

Sivaganga News: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

செல்போன் கொடுத்து 3 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், படைப்பு வீட்டில் கடந்த 2020 முதல் 2023 வரையில், திருமயம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் காவல்காரர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அவ்வப்போது சமையல், விவசாய கூலி வேலைக்கும் சென்று வருவது வழக்கம்.

பாலியல் தொல்லை:

தம்பதிக்கு 12 வயதுடைய மகள் இருக்கும் நிலையில், இவர்கள் வேலைக்குச் சென்றால் சிறுமி வீட்டில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்க்கும் சுப்பிரமணியன் (வயது 62) என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமிக்கு தின்பண்டம் வாங்கிக்கொடுப்பது, யூடியூப் பார்க்க வைப்பது என பழக்கப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

உண்மையை அறிந்த பெற்றோர்:

இப்படி சிறுமிக்கு தேவையானதை கேட்டு பாசத்துடன் இருப்பதுபோல நடித்த காமுகன், 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளான். இந்த விஷயம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரியப்படுத்திய நிலையில், அவர்கள் யாரிடமும் எதுவும் சொல்லாமல் சொத ஊருக்கே சென்றுள்ளனர். 

கண்ணீரில் மருவிய பெற்றோர்:

இதனிடையே, தம்பதிகளை காவலாளி வேலைக்கு சேர்ந்துவிட்ட முருகப்பன் என்பவர், எதற்காக பணியில் இருந்து சொல்லாமல் வந்தீர்கள் என தம்பதியை நேரில் சந்தித்து கேட்டுள்ளார். அப்போது, மகளுக்கு நடந்ததை அறிந்து துன்பப்பட்ட நிலையில், மகளின் எதிர்காலம் கருதி வந்துவிட்டதாக கண்ணீருடன் கூறி இருக்கின்றனர்.

குற்றவாளி கைது:

தம்பதி கூறியதைக்கேட்டு பதறிப்போன முருகப்பன், அவர்களுக்கு தைரியம் சொல்லி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வைத்துள்ளார். இதன்பேரில் சுப்பிரமணியத்திடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமிக்கு நடந்த கொடுமையை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, போக்ஸோவில் சுப்பிரமணியனை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் சில்மிஷம் செய்த முதியவர்.. விழுந்தது தர்ம அடி.. விருதுநகரில் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivagangai #Sexual Harassment #12 வயது சிறுமி #செக்ஸ் டார்ச்சர் #போக்ஸோ #காரைக்குடி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story