×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"இப்பலாம் பாசமே இல்ல..." வாயில் பேப்பரை திணித்து பிஞ்சு குழந்தை கொலை.!! தாய் செய்த கொடூரம்.!!

இப்பலாம் பாசமே இல்ல... வாயில் பேப்பரை திணித்து பிஞ்சு குழந்தை கொலை.!! தாய் செய்த கொடூரம்.!!

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்த பெனிட்டா ஜெய அன்னாள்(வயது 20). இவர் திண்டுக்கல் மாவட்டம் நாககோனானூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.40 நாளேயான அந்த குழந்தையின் வாயில் பேப்பரை அடைத்து துடிக்க துடிக்க தாய் கொலை செய்தார் என்று கூறப்படுகிறது.

குழந்தை பிறந்த பிறகு கணவரின் அன்பும் பாசமும் தனக்கு அதிகம் கிடைக்காமல் போனதாகவும் இதனால் குடும்ப பிரச்சனை  ஏற்பட்டதாகவும் இதற்கு குழந்தை தான் காரணம் என கருதியதால் குழந்தையை கொலை செய்ததாக தாய் ஒப்புக்கொண்டார்.

குழந்தையின் மரணம் குறித்து தந்தை கார்த்திக் சந்தேகத்திற்குரிய விளக்கமளித்ததால் இது வெளிச்சத்திற்கு வந்தது. பிரேத பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு பெனிட்டா ஜெயாவை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: குளுகோஸும், 40 தூக்க மாத்திரைகளும்.. 27 வயது பெண் மருத்துவர் வினோத முறையில் தற்கொலை.! 

இந்த சோகமான நிகழ்வு மன அழுத்தம் மற்றும் திருமண பிரச்சினைகளை கணவர் மனைவி மனம் விட்டு பேசி தீர்வு காணும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தம்பதிகளின் வேற்றுமையில் ஒன்றுமறியா பச்சிளங்குழந்தையின் உயிர் பறிபோனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: தாயா இல்ல நீ பேயா! பிறந்து 40 நாள் தான் ஆகுது! பிறந்த குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து துடிக்க துடிக்க.... தாயின் பகீர் வாக்குமூலம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #kanyakumari #Crime #Infant Murder #mother arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story