தாயா இல்ல நீ பேயா! பிறந்து 40 நாள் தான் ஆகுது! பிறந்த குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து துடிக்க துடிக்க.... தாயின் பகீர் வாக்குமூலம்!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் 40 நாள் பெண் குழந்தையை தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் விசாரணை மேற்கொண்டு தாயை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 40 நாள் பெண் குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமண வாழ்க்கையில் பிரச்சனை
பாலூர் காட்டுவிளைச் சேர்ந்த பெனிட்டா ஜெய அன்னாள் (20) கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கார்த்திக் மனைவியின் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
குழந்தை உயிரிழப்பு
சுமார் 40 நாட்களுக்கு முன்பு பெனிட்டா ஜெய அன்னாளுக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 9ஆம் தேதி இரவு வேலை முடித்து வீடு திரும்பிய கார்த்திக், குழந்தை அசைவற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே மனைவியிடம் கேட்டபோது, தவறி விழுந்ததாக கூறியதால் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு காலை தூங்கி எழுந்ததும் உடம்பில் ஒரே அரிப்பு! சில நிமிடங்களில் உடல் முழுவதும் வீக்கம்! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்...
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
கார்த்திக் போலீசில் புகார் அளித்ததை அடுத்து குழந்தையின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனையில், குழந்தை இயற்கையாக இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டதாக வெளிவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தாயின் வாக்குமூலம்
விசாரணையின் போது பெனிட்டா ஜெய அன்னாள் குழந்தையைத் தானே கொன்றதாக ஒப்புக்கொண்டார். "குழந்தை பிறந்ததிலிருந்து கணவர் காட்டிய அன்பு குறைந்துவிட்டது. குடும்பத்தில் பிரச்சனையும் ஏற்பட்டது. இதற்கு குழந்தையே காரணம் என்று எண்ணி, குழந்தையின் வாயில் பேப்பர் திணித்து கொன்றேன்" என்று அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் பெனிட்டா ஜெய அன்னாள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊரு விட்டு ஊரு போய் கணவனை கொள்ள பக்கா பிளான் போட்ட மனைவி! மயங்கி விழுந்து கணவன்..... திடுக்கிடும் சம்பவம்!