பிரியாணி கடை ஊழியரை தாக்கி வழிப்பறி... மூன்று ரவுடிகளை தூக்கிய போலீஸ்.!!
பிரியாணி கடை ஊழியரை தாக்கி வழிப்பறி... மூன்று ரவுடிகளை தூக்கிய போலீஸ்.!!
சென்னை எம்.ஜி.ஆர் நகர் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் பிரபு(35). இவர் கே.கே நகர், இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகாமையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கோயம்பேடு செல்வதற்காக கே.கே நகர் வன்னியர் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் பிரபுவை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரபு தான் எதையும் தரப்போவதில்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் உருட்டு கட்டையால் பிரபுவை அடித்து பணத்தை வழிப்பறி செய்து தப்பியுள்ளனர். பலத்த காயமடைந்த பிரபு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் பிரபுவை தாக்கி வழிப்பறி செய்த அபிஷேக்(25), நரேன்(25), பிரகாஷ்( 43 ) ஆகிய 3 நபர்களை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் அபிஷேக் மற்றும் நரேன் மீது ஏற்கனவே 10 குற்ற வழக்குகள் இருந்துள்ளது. பிரகாஷ் மீது ஏற்கனவே 14 குற்ற வழக்குகள் இருந்துள்ளது என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "ஐயோ கொல்ல பாக்குறாங்க.." பைக்கை மறித்து மனைவிக்கு வெட்டு.!! கணவன் வெறி செயல்.!!
இதையும் படிங்க: தூத்துக்குடியில் பயங்கரம்... பெண் போலீஸ் கணவனை தாக்கி செல்போன் பறிப்பு.!!