தூத்துக்குடியில் பயங்கரம்... பெண் போலீஸ் கணவனை தாக்கி செல்போன் பறிப்பு.!!
தூத்துக்குடியில் பயங்கரம்... பெண் போலீஸ் கணவனை தாக்கி செல்போன் பறிப்பு.!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பெண் தலைமை காவலரின் கணவனை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் காவலர் குடியிருப்பை சேர்ந்த ஜேசுராஜ்(47). இவர் கட்டுமான பணிகளுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வழக்கம் போல தனது டிராக்டரை கீழவாசல் தனியார் தொழிற்சாலையில் நிறுத்தி விட்டு அருகிலுள்ள தனது வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி அவரிடமிருந்து செல்போனை பறித்து ஜிபே மூலம் 2,300 ரூபாய் பெற்றுள்ளனர்.
மேலும் செல்போனை பிடுங்கி, உடைத்தெறிந்து விட்டு மிரட்டல் விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமி கர்ப்பம்... மது போதையில் தந்தை செய்த கொடூரம்.!!
இதையும் படிங்க: "ஓசி டீ தராததால் ஆத்திரம்... " மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு.!! மர்ம நபர்கள் வெறி செயல்.!!