×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோயில் திருவிழாவில் பயங்கரம்.. குவிக்கப்பட்ட 2000+ காவல்துறையினர்.. புதுக்கோட்டையில் பரபரப்பு.! 

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட சண்டையால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

கந்தர்வகோட்டை அய்யனார் கோயிலில் கலவரம் ஏற்பட்டது. 

கோயில் திருவிழா: 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை, வளவம்பட்டி, மூங்கில் அய்யனார் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடந்த 17 ம் தேதி காப்புக்கட்டி கோயில் திருவிழா தொடங்கியது. 

இதையும் படிங்க: #JUSTIN: திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்.. 2 பேர் டிஸ்மிஸ், அர்ச்சகருக்கு தடை.! 

தகராறு: 

இதனிடையே, மண்டகப்படி ஒதுக்குவதில் இருதரப்பினர் இடையே பிரச்சனை எழவே, ஒருதரப்பு நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இதனால் ஒருநாள் மட்டும் திருவிழா நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. 

திருவிழா: 

நீதிமன்றத்தின் அனுமதிப்படி 24 ம் தேதி திருவிழா நடக்க, சுவாமி புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் இருதரப்பு வாக்குவாதம் உண்டாகியது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நீதிமன்றத்தில் அனுமதி வாங்கிய தரப்பு, புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் மறியல் செய்தது. 

காவல்துறை குவிப்பு: 

இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உற்சவரின் சிலையை எடுத்துச்செல்ல முற்படவே, தர்ணா போராட்டம் நடந்தது. ஒருசிலர் கற்களை எடுத்து காவல்துறையினர் மீது வீச, அதிகாரிகள் தடியடி நடத்தினர். பின் சாமி சிலை மீட்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. பேச்சுவார்தைக்குப்பின் நேற்று மீண்டும் சிலை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. 

உள்ளூரில் நிலவி வரும் பதற்றமான சூழலால் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2000 காவல்துறையினர் டி.எஸ்.பி பிருந்தா தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ரௌடிக்கு எண்டு கார்டு போட்ட காதல் பஞ்சாயத்து? விழுப்புரத்தில் பகீர்.. நடந்தது என்ன? 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pudukkottai #Trending #Temple Festival #கந்தர்வகோட்டை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story