×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரௌடிக்கு எண்டு கார்டு போட்ட காதல் பஞ்சாயத்து? விழுப்புரத்தில் பகீர்.. நடந்தது என்ன? 

Viluppuram News: குற்றவழக்கில் தொடர்புடைய ரௌடி கொலை செய்யப்பட்டார். 

Advertisement

ரௌடி கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலை குற்றவாளி: 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர், சரவணம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரின் மகன் மோகன்ராஜ் (வயது 25). இவரின் மீது கொலை உட்பட பல குற்றவழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 

இதையும் படிங்க: 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை.. கண்மாயில் கிடந்த சடலம்.. சிவகங்கையில் திடுக்.!

கோயில் திருவிழா:

இதனிடையே, நேற்று முன்தினத்தில் கிராமத்தில் இருக்கும் வேம்பழகி அம்மன் கோயிலில் சாகை வார்த்தல் திருவிழா நடைபெற்றது. ஊரணி பொங்கல் வைத்து பெண்கள் ஊர்வலமாக வந்துகொண்டு இருந்தனர். அப்போது, மோகன்ராஜ் பெண்களுக்கு வழிவிடாமல் அரிவாள் எடுத்து மிரட்டி இருக்கிறார். 

கொலை: 

இதனால் பதறிப்போன பெண்கள் வேறு வழியாக கோயிலுக்குச் சென்றுள்ளனர். பின் இரவு 8 மணியளவில் மோகன்ராஜ் தொடர்ந்து பலரையும் அரிவாள் காண்பித்து மிரட்டி இருக்கிறார். இந்நிலையில், இரவு 11 மணியளவில் கடலூர் - சித்தூர் சாலையில், பேருந்து நிறுத்தம் அருகில் மோகன்ராஜ் மர்மமான முறையில் தலை நசுங்கி கொலை செய்யப்பட்டவாறு சடலமாக இருந்தார். 

அதிகாரிகள் விசாரணை: 

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் தொல்லை தாங்காமல் அவதிப்பட்டு வந்த மக்கள், உடலை தங்களின் கிராமத்தில் புதைக்கவோ, தகனம் செய்யவோ அனுமதி இல்லை என எதிர்ப்பு தெரிவித்தனர். கொலை தொடர்பாக மோகனின் தந்தையும் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். 

காதல் விவகாரமா?

அந்த புகாரில், மகன் இதே கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவரை காதலித்த விவகாரத்தில் முன்விரோதம் இருந்தது. இதனால் கொலை நடந்திருக்கும். சந்தோஷ் (வயது 37), கிசங்கர் (வயது 47), விஜய் (வயது 21), ஐயப்பன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதன்பேரில் அதிகாரிகள் 3 பேரை கைது செய்த நிலையில், எஞ்சியோரை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க: 17 வயது சிறுமி - 19 வயது இளைஞர் ஆணவக்கொலை? சூறையாடப்பட்ட வீடு.. மயிலாடுதுறையில் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Viluppuram #rowdy murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story