17 வயது சிறுவனுடன் காதல்.. கர்ப்பிணியான 19 வயது இளம்பெண்.. போக்ஸோ வைத்த ஆப்பு..!
Kanyakumari News: சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் இருந்ததாக பெண்ணின் மீது போக்ஸோவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
19 வயதுடைய திருமணம் ஆகாத இளம்பெண் போக்ஸோவில் சிக்கி இருக்கிறார். இந்த விஷயத்துக்கான காரணத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
8 மாத கர்ப்பம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் பகுதியில் வசித்து வரும் 19 வயதுடைய இளம்பெண், சம்பவத்தன்று உடல்நலக்குறைவு காரணமாக குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். மருத்துவப்பரிசோதனையில் பெண் 8 மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!
விசாரணை:
இளம்பெண்ணின் கணவர் & திருமணம் குறித்து விசாரித்தபோது, பெண் தெரிவித்த தகவல் முரணாக இருந்துள்ளது. இதனால் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
நடந்தது என்ன?
அதாவது, இளம்பெண் விமான பணியாளர்களுக்கான டிப்ளமோ படிப்பு படித்து வந்துள்ளார். குழித்துறையில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்து வந்த பெண்ணுக்கு, அதே கல்வி நிறுவனத்தில் உடன் பயின்று வந்த களியக்காவிளை பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவனுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த படிப்பில் இவர்கள் இருவர் மட்டுமே பயின்று வந்தனர்.
நெருக்கம்:
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நட்பில் இருந்து காதலாக மாற, பின்னாளில் அடிக்கடி பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இளம்பெண் சிறுவனின் வீட்டுக்கு, அவரின் பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்று இருக்கிறார். அங்கு இளம்பெண்ணின் கட்டாயத்தில் இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கர்ப்பம்:
பின் இந்த செயலும் பலமுறை தொடரவே, இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் பெண் கர்ப்பமானது தெரியவந்தது. பெற்றோரிடம் இதுகுறித்த தகவலை தெரிவிக்காத நிலையில், கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியானதும் கர்ப்பம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விஷயம் குறித்து சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெண் 8 மாத கர்ப்பமாக இருப்பதால், மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
இதையும் படிங்க: கவனிக்க ஆட்கள் இல்லை.. பாலுக்காக கதறிய பச்சிளம் பிஞ்சு.. கொன்று புதைத்த தாய்.. திருவண்ணாமலையில் சோகம்.!