×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செல்போனை பறித்துக்கொண்டு லஞ்சம் கேட்ட போலீஸ்.. 18 வயது சிறுவன் விபரீதம்.. கிருஷ்ணகிரியில் சோகம்.!

Krishnagiri News: 18 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement

ஸ்மார்ட்போனை வாங்கிய காவலர் ரூ.2000 லஞ்சம் பெற்றுக்கொண்டு போனை கொடுத்ததால் மாணவர் விபரீத முடிவெடுத்தார்.

மறுதேர்வுக்கு சென்றார்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், மூக்கண்டப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் பச்சன். இவரின் மகன் ரோஷன் (வயது 18). கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்து வந்தவர், தேர்வில் தோல்வி அடைந்ததால் ஜூலை 08ம் தேதி ஓசூர் - தேன்கனிக்கோட்டையில் செயல்படும் பள்ளியில் மறுதேர்வு எழுதச் சென்றுள்ளார்.  

இதையும் படிங்க: 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை.. கண்மாயில் கிடந்த சடலம்.. சிவகங்கையில் திடுக்.!

வீடியோ:

அச்சமயம், காவல்துறை அதிகாரி ஒருவர் சிறுவனின் ஸ்மார்ட்போனை வாங்கி பார்த்துள்ளார். அந்த ஸ்மார்ட்போனில், சிப்காட் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்யும் வீடியோ இருக்கவே, காவலர் ஸ்மார்ட்போனை சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார்.

கண்டிப்பு:

பின் மறுத்தால் ரோஷனின் தாய் சங்கீதா, சகோதரர் காவல் அதிகாரி சந்திரனிடம் ஸ்மார்ட்போனை கேட்டுள்ளனர். அதிகாரி மாணவரை நேரில் அழைத்து வர கூறி இருக்கிறார். பின் ரோஷன் சென்றபோது, எதற்காக காவல்துறையை வீடியோ எடுத்தாய்? என கேட்டுள்ளனர். 

விபரீதம்:

மேலும், இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என எச்சரித்து எழுதிவாங்கி அனுப்பி வைத்துள்ளார். இறுதியாக காவல் அதிகாரி சந்திரன் ரோஷனிடம் ரூ.2000 பெற்றுக்கொண்டு செல்போனை கொடுத்துள்ளார். வீட்டுக்கு வருத்தத்துடன் சென்ற மாணவர் தனது தாய்க்கு, "அம்மா உன்னை மிஸ் பன்றேன். உனக்கு நான் நல்ல பிள்ளை இல்லை"  என வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா விசாரணை நடத்தி காவல் அதிகாரி சந்திரனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: செல்போன் கொடுக்காத விரக்தியில் சிறுவன் எடுத்த முடிவு.. கண்ணீரில் பெற்றோர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Krishnagiri #18 Year Old Boy #Suicide Death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story