செல்போன் கொடுக்காத விரக்தியில் சிறுவன் எடுத்த முடிவு.. கண்ணீரில் பெற்றோர்.!
Thiruvarur News: செல்போன் கொடுக்காத காரணத்தால் சிறுவன் தற்கொலை செய்துகொண்டார்.
12ம் வகுப்பு மாணவரின் விபரீத முடிவு பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியது.
17 வயது சிறுவன்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, பரவாக்கோட்டை, தெற்குத்தெருவில் வசித்து வருபவர் தென்கோவன். இவரின் மகன் தர்ஷன் (வயது 17). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இதையும் படிங்க: பாஸ்புக்கை ஏண்டா தொலைச்ச? கண்டித்த தாய்.. விபரீத முடிவெடுத்த 17 வயது சிறுவன்..!
தற்கொலை:
கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை நேரத்தில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்தவர், தந்தையின் செல்போனை கேட்டு இருக்கிறார். கேம் விளையாட செல்போன் தரமுடியாது என அவர் கூறவே, விரக்தியடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காவல் நிலையத்தில் புகார்:
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் தர்ஷனின் தாயார் மாதவி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 15 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை.. கண்மாயில் கிடந்த சடலம்.. சிவகங்கையில் திடுக்.!