நள்ளிரவில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவன்.. மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி!
நள்ளிரவில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சிறுவன்.. மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி!
தஞ்சாவூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 16 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், உறவினர் வீட்டில் தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி நள்ளிரவில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மாணவி தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாணவிக்கு அந்த சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனிடையே மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வேளாங்கண்ணி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்!.. தஞ்சை மறைமாவட்ட ஆயர் அதிரடி அறிவிப்பு!
இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் உறவினர், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, 16 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வளர்ப்பு மகளுக்கு பாலியல் அத்துமீறல்.. தட்டிக்கேட்ட தாய்க்கு நேர்ந்த கொடூர சம்பவம்!