×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லேப்டாப் யூஸ் பண்ணும்போது கவனம்.. சார்ஜ் போடும்போது விபரீதம்.. +1 மாணவர் பரிதாப பலி.! 

Thiruvallur News: +1 மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

Advertisement

மின்சாதன பொருட்களை இயக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். 

பள்ளி மாணவர்: 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கற்குழாய் சாலை பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவர் பெயிண்டர் ஆவார். செந்திலின் மனைவி கவிதா. தம்பதிகளுக்கு சீனிவாசன் என்ற 15 வயதுடைய மகனும், ஜீவா, ரித்தி என 3 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் ஜீவா திருவள்ளூர் மணவாளநகரில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: அடுத்தடுத்து பரவும் டெங்கு.. பீதியில் மக்கள்.. சிறார்களை கவனமாக பார்த்துக்கோங்க மக்களே.! 

மடிக்கணினி: 

இந்நிலையில், ஜீவா தனது நண்பரின் லேப்டாப்பை வீட்டுக்கு வாங்கி வந்து கேம் விளையாடிக்கொண்டு இருந்தார். தொடர்ந்து சார்ஜ் காலியானதால், லேப்டாப்பை சார்ஜ் போட சென்றுள்ளார். அச்சமயம், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். 

உயிரிழப்பு: 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. பின் இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: உயிரைப்பறித்த கொசு மருந்து? கோவையில் நடந்த சோகம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் விபரீதம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending #11th Class Student #Laptop #Electrical Attack
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story