×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொழுகை சொல்லிக்கொடுப்பதாக 13 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை.. மசூதியில் அதிர்ச்சி செயல்.!

தொழுகை செய்வது எப்படி என கற்பிப்பதாக கூறி 13 வயது சிறுவனை 23 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்துள்ளது.

Advertisement

13 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத், ஜமல்பூர், கெய்க்வாட் ஹவேலி பகுதியில் வசித்து வருபவர் நோமன் ஷேக் (வயது 23). இவர் சம்பவத்தன்று அங்குள்ள மசூதிக்கு சென்று இருக்கிறார். அப்போது, அங்கிருந்த 13 வயது சிறுவனிடம், தொழுகை செய்வது எப்படி? என கற்பிப்பதாக மசூதியின் மேல்தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுவன் வன்கொடுமை:

அங்கு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். வீட்டுக்குச் சென்ற சிறுவன் பெற்றோரிடம் தனக்கு நடந்தது குறித்து கண்ணீர் வடித்தபடி தெரிவித்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

காவல்துறை விசாரணை:

மேலும், இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறுவனை இளைஞன் மேல்மாடிக்கு அழைத்துச் சென்றதை சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் உறுதி செய்தனர். சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.

உள்ளூர் மக்கள் கொந்தளிப்பு:

நோமன் ஷேக் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஷேக்கின் செயல் உள்ளூர் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாக்குதல் தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே சிறைக்கு சென்று வந்த ஷேக், தற்போது சிறுவனை வன்கொடுமை செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

இதையும் படிங்க: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீடுபுகுந்து துணிகரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #sexual abuse #பாலியல் வன்கொடுமை #மசூதி #குஜராத்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story