×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வைகாசி விசாகம் 2026 எப்போது? நல்லநேரம், வழிபாடு முறைகள் என்ன? முழு விபரம்.!

2026ம் ஆண்டுக்கான வைகாசி விசாகம் குறித்த தகவல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

வைகாசி விசாகம் முருகனை வழிபட உகந்த நாள் ஆகும்.

வைகாசி விசாக கொண்டாட்டம்:

முருகனை விரதமிருந்து வழிபாடு செய்ய உகந்த நாளான வைகாசி விரதம், வைகாசி மாதத்தின் பௌர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் வருகிறது. இந்த நாளை புராணங்களின்படி முருகன் அவதரித்த நாளாகவும் குறிப்பிடுவர். இதனை ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகமாக ஆன்மீக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் முருகனை விரதமிருந்து வழிபட வேண்டியது கிடைக்கும்.

இதையும் படிங்க: கார்த்திகை மாத பௌர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?.!

வரலாறு என்ன?

சிவனை நோக்கி பல ஆண்டுகள் கடுமையான தவம் இருந்த சூரபத்மன், தாயின் கருவில் உருவாத, சிவசக்தி இணைந்த சக்தியால் மட்டுமே தனக்கு மரணம் என்ற வரத்தை பெற்றார். இதனால் தேவர்களை துன்புறுத்திய நிலையில், சிவனிடம் நுரையீடு சென்றுள்ளது. இதனால் தனது நெற்றிக்கண்ணை திறந்த சிவன் தீப்பொறிகள் சுடரை சரவண பொய்கையில் 6 பகுதியாக தாமரை மீது விழவைத்தார். இந்த தீப்பொறிகள் குழந்தையாக மாற, அவர்களை கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். கார்த்திகை பெண்களிடம் வளர்ந்த ஆறுமுகத்தையும், 12 திருக்கரம் கொண்ட உருவமாக ஆணை பார்வதி மாற்றி தனது சக்தியுடன் உருவாகிய வேலினை முருகனுக்கு போர் ஆயுதமாக கொடுத்தார். இதனைக்கொண்டு சூரபத்மன், அவரின் சகோதரரை போரில் முருகன் வென்றார். தீமைகளை அழித்து நன்மையை காப்பாற்ற முருகன் அவதரித்த நன்னாள் வைகாசி விசாகம் ஆகும்.

விரதம் & பலன்கள்:

வைகாசி விசாகம் நாளில் பால்குடம் சுமந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது, பாதையாத்திரை நேர்த்திக்கடன் நல்லது. இந்த நாளில் முருகனை வழிபட குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மகிழ்ச்சி கிடைக்கும். வேண்டியது நிறைவேறும். பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை அருள் கிடைக்கும். 2026ம் ஆண்டுக்கான வைகாசி விசாகம் மே 30ல் சிறப்பிக்கப்படுகிறது. பௌர்ணமி திதி மே 30 பகல் 12:55 க்கு தொடங்கி மே 31 பகல் 02:45ல் முடிகிறது. விசாகம் நட்சத்திரம் மே 29 பகல் 12:31 ற்கு தொடங்கி மே 30 பகல் 02:18ல் நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க: இந்த நாளை தவறவிடாதீங்க.. நீரில் இறங்கினாலே புண்ணியம்.. மாசி மகத்தின் மகத்துவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vaikasi Visakam 2026 #Spiritual Tips #வைகாசி விசாக விரதம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story