இந்த நாளை தவறவிடாதீங்க.. நீரில் இறங்கினாலே புண்ணியம்.. மாசி மகத்தின் மகத்துவம்.!
மாசி மகத்தில் நீர்நிலைகளில் புனித நீராடி வழிபாடு செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கி நன்மைகள் பெருகும்.
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணைந்து வரும் மாசி மகம் இன்று (02 மார்ச் 2026) பக்தர்களால் சிறப்பிக்கப்படுகிறது.
மாசி மகத்தின் சிறப்பு:
மாசி மாதத்தில் வரும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மாசி மகம் திங்கட்கிழமை 02 மார்ச் 2026 இன்று சிறப்பிக்கப்படுகிறது. மகம் நட்சத்திரம், பௌர்ணமி இணைந்து வரும் நாளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. கோவில்களில் மட்டுமல்லாது நீர் நிலைகளிலும் பக்தர்கள் இதனை விழாவாக எடுத்து சிறப்பாக கொண்டாடுவார்கள்.
இதையும் படிங்க: மாசி மகம் 2026: விரத முறைகள், செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்னென்ன?
தெய்வீக சக்தி:
அதன்படி திங்கட்கிழமையான இன்று காலை 08:17 மணி முதல் தொடங்கி, நாளை காலை 08:07 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது. நாளை மாலை 6:29 மணிக்கு பௌர்ணமி தொடங்குகிறது. இதனால் மாசி மகம் கொண்டாடப்படும் நாளில் நீர்நிலைகளான ஆறுகள், ஏரிகள், கடற்கரைகளில் தெய்வீக சக்தி அதிகரித்து காணப்படும் என கூறப்படுகிறது.
மகாமக குளத்தின் மகத்துவம்:
இந்த நாளில் கும்பகோணத்தில் இருக்கும் மகாமக குளத்தில் கங்கை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து, ஆகிய நதிகள் எழுந்தருளும் எனவும் கூறப்படுகிறது. இதனால் அந்த தினத்தில் மகாமகம் குளத்தில் நீராடினால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். முன் ஜென்ம பாவங்கள் நீங்கும். இந்த நாளில் விசேஷங்கள் தொடங்குதல், தர்ம காரியங்கள் செய்வது, விழா எடுத்துக் கொண்டாடுவது போன்றவைகளால் தெய்வீக சக்தி கிடைக்கும்.
ஆன்மீக பலன்:
வெற்றி, மகிழ்ச்சி, ஞானம் அதிகரிக்கும். அதுபோல மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்ததும், பார்வதி தேவி தட்சனின் மகளாக அவதாரம் எடுத்ததும் இந்த நாளில் தான் என சொல்லப்படுகிறது. முன்னோர்களின் ஆன்மா இந்த தினத்தில் சாந்தி அடைந்தால் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும்.