ஐயோ... கடவுளே! கோவில் திருவிழாவில் பொங்கல் பானையிலிருந்து எழுந்த புகை... அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்! 25 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி... !!!
மதுரை உசிலம்பட்டி அருகே கன்னிமார் கோயில் திருவிழாவில் கதம்ப வண்டுகள் கூட்டமாகத் தாக்கியதில் 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொண்டிக்குண்டு கிராமத்தில் உள்ள கன்னிமார் கோயில் திருவிழாவில் கதம்ப வண்டுகள் கூட்டமாகத் தாக்கியதில் 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வண்டுகள் வெளியேறி பக்தர்களை விரட்டிக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் புகையால் கலைந்த வண்டுகளின் கூடு
மொண்டிக்குண்டு கன்னிமார் கோயிலில் நடைபெற்ற திருவிழா வழிபாட்டில் 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒன்றாக பொங்கல் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொங்கல் பானைகளில் இருந்து எழுந்த அதிகப்படியான புகை, கோயில் அமைந்துள்ள மலை அடிவாரப் பகுதியில் இருந்த கதம்ப வண்டுகளின் கூட்டை கலைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 8 வருட காதல் மனைவியை கதறக்கதற வெட்டிக்கொன்ற கணவன்...! போலீசை அதிரவைத்த வாக்குமூலம்...!!!
கூடு கலைந்ததும் ஆத்திரமடைந்த கதம்ப வண்டுகள் கூட்டமாக வெளியேறின. அங்கு திரண்டிருந்த பக்தர்களை நாலாபுறமும் விரட்டிச் சென்று கொட்டத் தொடங்கின. இதனால் அச்சமடைந்தவர்கள் அலறியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
வண்டுகள் கொட்டியதில் 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் பெருமாள் (42), கருப்பன் (40), சக்கரையம்மாள் (55), அஸ்வினி (20) ஆகிய நால்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதையடுத்து அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
போலீசார் விசாரணை
தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் மருத்துவமனைக்கும், கோயில் பகுதிக்கும் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், திருவிழா நடைபெற்றபோது ஏற்பட்ட சூழ்நிலை மற்றும் பக்தர்கள் காயமடைந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தாயின் கள்ளக்காதலால் பரிதாபமாக பலியான 9 வயது மகன்! வீட்டின் கட்டிலுக்கு அடியில் கண்ட அதிர்ச்சி...! பகீர் சம்பவம்...!!!