×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

8 வருட காதல் மனைவியை கதறக்கதற வெட்டிக்கொன்ற கணவன்...! போலீசை அதிரவைத்த வாக்குமூலம்...!!!

மாங்காடு அருகே மனைவியை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவர் தப்பியோடிய நிலையில், போலீசார் அவரை பேருந்து நிலையம் அருகே கைது செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement

சென்னை அடுத்த மாங்காடு அருகே பட்டூர் பகுதியில் மனைவியை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கணவர் முஜைதீன் கைது செய்யப்பட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அவர் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. பின்னர் மாங்காடு பேருந்து நிலையம் அருகே போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

காதலித்து திருமணம் செய்த தம்பதி

பட்டூர் பகுதியைச் சேர்ந்த முஜைதீன், அங்குள்ள இறைச்சிக் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரும் சோபியா என்பவரும் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இதையும் படிங்க: தாயின் கள்ளக்காதலால் பரிதாபமாக பலியான 9 வயது மகன்! வீட்டின் கட்டிலுக்கு அடியில் கண்ட அதிர்ச்சி...! பகீர் சம்பவம்...!!!

இந்நிலையில், வீட்டில் இருந்த சோபியாவை முஜைதீன் ஆயுதத்தால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் முஜைதீன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

உடலை மீட்ட போலீசார்

சோபியா சடலமாக கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தப்பியோடிய முஜைதீனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மாங்காடு பேருந்து நிலையம் அருகே அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

கைது செய்யப்பட்ட முஜைதீனிடம் காவல்நிலையத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சோபியா கொலை செய்யப்பட்டதற்கான பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத் தகராறு உள்ளிட்ட காரணங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: BREAKING: குஷியோ குஷி! 12,692 அரசு பேருந்துகளில் இலவச பயணம்..! வெற்றி பயணம் திட்டத்தை டிக்கெட் கொடுத்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மாங்காடு கொலை #Mangaadu Murder #மனைவி கொலை #Husband Arrest #சோபியா கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story