×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#JUSTIN: திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்.. 2 பேர் டிஸ்மிஸ், அர்ச்சகருக்கு தடை.! 

கோயிலில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அர்ச்சகருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள், அரசு ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லஞ்சம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோயிலில், பக்தர்களிடம் பக்தியின் பெயரில் லஞ்சம் அர்ச்சகர்களால் வாங்கப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த பக்தர்கள் பலரும் எப்போதுதான் இந்த விஷயங்களுக்கு விடுதலை கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தனர்.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் செயலிக்கு தடை... பயனர்களுக்கு ஷாக்.. அமலான உத்தரவு.!

விசாரணை:

இதனிடையே, தமிழ்நாட்டில் நடந்த ஆட்சிமாற்றத்துக்குப்பின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சரின் உதவியாளர்களிடம் விஐபி தரிசனம் செல்ல லஞ்ச பேரம் பேசப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விஷயம் குறித்து அமைச்சர் நேரடியாக விசாரணையை முன்னெடுத்தார்.

அதிரடி நடவடிக்கை:

இந்நிலையில், அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் தொடர்புடைய அர்ச்சகர் ஐயப்பன் மறுஉத்தரவு வரும் வரையில் கோயிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். ஐயப்பனின் அறிவுறுத்தலின் பேரில் கதவை திறந்துவிட்டு பாதுகாப்பு பணியில் 2 பாதுகாவலர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

முடிகாணிக்கை செய்ய வரும் இடத்தில் பக்தர்களிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 2 ஊழியர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் முறைகேடுகளும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: #BREAKING: திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு சம்பவம்.. லஞ்ச மோகத்தால் அமைச்சரிடம் சிக்கிய சூப்பர் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK #Tiruchendur #Bribery case #அமைச்சரிடம் லஞ்சம் #திருச்செந்தூர் கோயில்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story