#BREAKING: திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு சம்பவம்.. லஞ்ச மோகத்தால் அமைச்சரிடம் சிக்கிய சூப்பர் சம்பவம்.!
Tiruchendur Temple Bribery Minister Visit: அறநிலையத்துறை அமைச்சர் உதவியாளரிடம் லஞ்சம் கேட்டதாக திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
மாறுவேடத்தில் சோதனை நடத்திய அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் அதிரடியாக சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
தொடர் லஞ்ச புகார்:
Tiruchendur Bribery Case: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோயிலில், பக்தர்களிடம் பக்தியின் பெயரில் லஞ்சம் அர்ச்சகர்களால் வாங்கப்படுகிறது. பொதுதரிசனத்தில் வரும் மக்களுக்கு குடிநீர் கூட ரூ.5 கட்டணம் வாங்கி கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து அங்கு பணியாற்றும் அர்ச்சகர்களிடம் முறையிட்டால், அரசு அதிகாரி இதை வாங்கிக்கொடுத்தால் தான் எங்களுக்கு சம்பளம் தருவார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் கொடூரம்.. ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. தலைநகரில் அதிர்ச்சி.!
அமைச்சர்கள் ஆய்வு:
நீங்கள் யாரிடம் சென்று வேண்டுமானாலும் புகார் தெரிவியுங்கள் என்று வெளிப்படையாகவே கூறி வந்தனர். இது மட்டுமல்லாது பக்தர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, பொதுதரிசனத்தில் வருவோரை அல்லோல்படவைத்து தரிசனத்துக்கு அனுப்பும் பணிகளையும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தினர் தொடர்ந்து வந்ததால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
நடவடிக்கை உறுதி:
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது, விஐபி தரிசனத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உதவியாளரை அனுப்பி வைத்து சோதனை செய்தபோது, லஞ்சம் வாங்குவது உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து தற்போது ஆய்வு நடந்து வரும் நிலையில், ஆய்வுக்குப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலியை திருமணம் செய்ய அண்ணனிடம் பெண் கேட்ட இளைஞர்.. கடலில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பறிபோன உயிர்.!