சனி - புதன் எதிரெதிரில் உருவாகும் சமசப்தக யோகம்! இந்த 5 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்ட நேரம் தான்.. வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்குமாம்!!!
செப்டம்பர் 7 முதல் 26 வரை உருவாகும் சமசப்தக யோகத்தால் ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு பணம், வேலை மற்றும் தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கலாம்.
புதன் கன்னி ராசியில் நுழைந்ததைத் தொடர்ந்து சனி, புதன் எதிரெதிர் நிலையில் அமைந்துள்ளதாக வேத ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன. இதனால் சமசப்தக யோகம் உருவாகியுள்ளதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். செப்டம்பர் 7 முதல் 26-ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு பணவரவு, வேலை மற்றும் தொழிலில் சாதகமான மாற்றங்களைத் தரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
ரிஷபம், மிதுனத்திற்கு பணம் மற்றும் சொத்து சார்ந்த பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்கள் புதிய திட்டங்களைத் தொடங்கும் சூழலும் உருவாகலாம்.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கு? எதிர்பார்த்த பணம் வரும்... சில ராசிகளுக்கு திடீர் திருப்பம்!
மிதுன ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனம் அல்லது சொத்து தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை உருவாகலாம். இதனுடன் வருமானத்துக்கான புதிய வழிகளும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கன்னி ராசிக்கு புதிய வாய்ப்புகள்
கன்னி ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையும் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும் காலமாக இருக்கலாம். தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் மதிப்பு கூடுவதுடன், பெரிய தொழில் ஒப்பந்தங்கள் அல்லது புதிய வாய்ப்புகள் தேடி வரலாம் எனக் கூறப்படுகிறது.
மகரம், கும்பத்திற்கு எதிர்பாராத முன்னேற்றம்
மகர ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் மீண்டும் நகரத் தொடங்கலாம். வெளிநாடு செல்வது அல்லது உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும் சூழல் உருவாகலாம். இருப்பினும், இவை அனைத்தும் ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலான கணிப்புகள் மட்டுமே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு முன்பே இந்த 5 ராசிகளுக்கு அடிக்கிது அதிஷ்ட ஜாக்பட்! பணம் வரவு, தொழில் வாய்ப்பு.... தொட்டதெல்லாம் பொண்ணாகும் நேரம் இது!!!