ஐயோ... சாமிக்கே வந்த சோதனை! கண்முன்னே கங்கை நதியில் மூழ்கிய 150 ஆண்டு பழமையான சிவன் கோவில்! திக் திக் வீடியோ...!!!
மேற்கு வங்காளத்தின் மால்டாவில் கங்கை நதியின் கடும் கர அரிப்பால் 150 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் ஆற்றில் மூழ்கி முற்றிலும் அழிந்தது.
மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கங்கை நதியில் மூழ்கி முற்றிலும் அழிந்தது. ரதுவா- பிளாக்கில் உள்ள முலிராம் தோலா பகுதியில் இந்த கோவில் அமைந்திருந்தது. தொடர் கர அரிப்பால் கோவில் இடிந்து விழுந்ததை கிராம மக்கள் கண்ணீருடன் பார்த்தனர்.
கங்கை நதியில் மூழ்கிய பழமையான கோவில்
மகானந்தடோலா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்த பகுதியின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சிவன் கோவில் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக கங்கை நதியின் நீரோட்டத்தால் கர அரிப்பு தீவிரமடைந்த நிலையில், கோவில் அமைந்திருந்த பகுதியும் மெதுவாக ஆற்றுக்குள் சென்றது.
இதையும் படிங்க: என்னா ஒரு ஸ்பிடூ... பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது திடீரென வந்த எமன்! தூக்கி வீசப்பட்ட கொடூரம்... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!!
நிலைமை மோசமடைந்த நிலையில், கோவிலின் கட்டிடம் திடீரென சரிந்து கங்கை நீரில் மூழ்கியது. அதை தடுத்து நிறுத்த முடியாமல் கிராம மக்கள் செய்வதறியாது நின்றனர். கோவில் ஆற்றில் மூழ்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளன.
வீடுகள், விளைநிலங்களுக்கும் பாதிப்பு
கோவில் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களும் Ganga River கரை அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நிலம் ஆற்றுக்குள் சரிந்து வருவதால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: இதெல்லாம் தேவையா? ரீல்ஸ் மோகத்தால் 30 அடி அணையில் இருந்து குதித்து இளைஞர்! இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி.... நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!!