×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சித்திரை பௌர்ணமி நாளில் பெரும்பாக்கியதை பெற எளிய வழிபாடு.!

சித்திரை பௌர்ணமி நாளில் பெரும்பாக்கியதை பெற எளிய வழிபாடு.!

Advertisement

சித்திரை பௌர்ணமி நாளில் சித்திரகுப்தரை வழிபாடு செய்து உப்பு சேர்க்காத சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகளை நைவேத்தியம் செய்து நோட்டு, பேனா மற்றும் நவதானியம் போன்றவற்றை பிறருக்கு தானமாக கொடுத்தால் நமது முன் ஜென்ம பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. 

இந்த நாளில் விரதம் இருந்து கிரிவலம் வந்து ஏழை எளியவருக்கு அன்னதானம் செய்வதன் மூலம் ஏழு பிறவி பாவங்களையும் நீக்கி புண்ணியத்தை பெறலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சித்ரா பௌர்ணமி நாளில் அதிகாலை சுத்தமான நீரில் குளித்து சித்ரகுப்தரின் படத்தை வைத்து அவருக்கு அவல், சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகளை படைத்து வழிபட வேண்டும். 

பின்னர், அரிசி, காய்கறிகள், பேனா, நோட்டு, புத்தகங்கள், நவதானியம் உள்ளிட்டவற்றை முறத்தில் வைத்து ஏழைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இந்த நாளில் உப்பு இல்லாத உணவை தான் நாம் நைவேத்தியம் செய்து சாப்பிட வேண்டும். இதனால், பாவ விமோசனம் கிடைக்கும். திருவண்ணாமலை போன்ற சிவ தலங்களுக்கு கிரிவலம் செய்வது நமது கர்ம வினைகளை போக்க உதவும். 

இதையும் படிங்க: Maha Shivaratri: மகா சிவராத்திரி 2026.. விரதத்தின் பலன்கள் கிடைக்க இதெல்லாம் கட்டாயம்..!

காமதேனுவின் அம்சமான சித்திரகுப்தர் மகிழ்ச்சி அடைந்து அருள் கொடுக்க வேண்டுமானால் அன்று கோ பூஜை எனும் பசுவை பூஜை செய்வது சிறந்தது. இந்த நாளில் சித்திரகுப்தர் பூஜை முடிந்த பின்னர் வாசலில் கோலம் இட்டு அவர் தெற்கு திசையில் இருந்து வருவதாக நினைத்து அதன் பின் உள்ளே நுழைந்ததும் கோலத்தை அழித்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால் முன் ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும்.

இதையும் படிங்க: இன்று அமாவாசை.. மாலைக்குள் இதை கண்டிப்பாக பண்ணிடுங்க..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chithra pournami #chithira kupthar #சித்திரை பௌர்ணமி #சித்திரை #பௌர்ணமி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story