கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக்.. இனி ஜியோ ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட் நேரலை கிடையாது?.!
ஜியோ ஹாட்ஸ்டார் ஐசிசி ஒளிபரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் நிதி இழப்பால் ஐசிசி ஒளிபரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணமுடியாத நிலை ஏற்படலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ ஹாட்ஸ்டார் 17 மொழிகளில் திரைப்படங்கள், நாடகங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கி வருகிறது. இதில் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் பிரபலமாக கவனிக்கப்படுகிறது. 2024 முதல் 2027 வரை ஐசிசி நிகழ்வுகளுக்கான இந்திய நேரடி ஒளிபரப்பு உரிமைகளை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்தது.
கிரிக்கெட் நேரலை:
இதில் டி20 உலக கோப்பை 2024 நடைபெற்று முடிந்துவிட்டது. முன்னதாக சாம்பியன் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி 2025, பெண்கள் உலக கோப்பை 2025, டி20 உலக கோப்பை 2026 போன்ற முக்கியமான சில போட்டிகளுக்கு நேரடி ஒளிபரப்பு உரிமையை பெற்றிருந்தது. இந்த போட்டிகள் நேரலையில் ஒளிபரபரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: IND Vs SA ODI: சதம் கடந்து விளாசிய விராட் கோலி.. 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி.!
விலக முடிவு?
மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் இதனை நேரலையில் பார்க்கலாம். இதனிடையே நிதி இழப்பு காரணமாக ஜியோ ஸ்டார் 2026 டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக விரும்புவதாக ஐசிசிக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட் கிடையாதா?
இதனால் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒளிபரப்பாளரை தேடி சோனி, நெட்பிக்ஸ், அமேசான் நிறுவனங்களை ஐசிசி அணுகியுள்ளது. புதிய ஒளிபரப்பாளர் கிடைக்காத பட்சத்தில் உரிமை கட்டணத்தை குறைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம் என்ற வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதனால் இம்முறை ஜியோ ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட் போட்டியை காண முடியாத சூழல் ஏற்படலாம்.
இதையும் படிங்க: குஷியோ குஷி! 15 லட்சம் பேருக்கு டிச- 12 முதல் ரூ.1000, பொங்கல் பரிசாக ரூ.5000...! திமுக அரசின் சூப்பர் அறிவிப்பு!