×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

8 மணிக்கு தொடங்கும் அதிரடி ஆட்டம்! கோப்பையை வெல்ல இந்தியா–இலங்கை பலப்பரீட்சை!

8 மணிக்கு தொடங்கும் அதிரடி ஆட்டம்! கோப்பையை வெல்ல இந்தியா–இலங்கை பலப்பரீட்சை!

Advertisement

துபாயில் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஆசிய கோப்பையை வெல்ல இரு அணிகளும் தீவிரமாக தயாராகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இன்றிரவு 8 மணிக்கு துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதேபோல், இந்த போட்டி சோனி லைவ் சேனலில் ஒளிபரப்பாகிறது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் இலங்கை அணியும் தோல்வியே சந்திக்காமல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மகளிர் ஆசியக் கோப்பை: இன்று இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை!

இதுவரை நடைபெற்ற 9 ஆசியக் கோப்பைகளில் 7 முறை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதில், கடைசியாக நடைபெற்ற ஆசியக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி முதன் முறையாக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வங்கதேச அணியும் ஒரு முறை மகளிர் ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.

இதையும் படிங்க: மகளிர் ஆசியக் கோப்பை: இன்று இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Women's asia cup #India women's #Women's asia cup 2026 #Srilanka women's #Sony live #Dubai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story