×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்னும் எத்தனை நாள்தான் காத்திருப்பது? சென்னை அணியின் ஆட்டத்தால் செம கடுப்பில் ரசிகர்கள்.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 210 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் மோதிய போட்டியில் கடைசி வரை பதற்றம் நீடித்தது. 210 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப், இறுதியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் சென்னை அணியின் நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.

சென்னை அணியின் வலுவான ஸ்கோர்

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே நல்ல முன்னேற்றம் கிடைத்தது. ஆயுஷ் மாத்ரே 73 ரன்கள் குவித்தார். அதன்பின் ஷிவம் துபே 45 ரன்களும், சர்ப்ராஸ் கான் 32 ரன்களும் சேர்த்து ரன் வேகத்தை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது சென்னை அணி. பஞ்சாப் தரப்பில் வைஷாக் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதிரடி தொடக்கம்

210 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடியது. பிரியான்ஷ் ஆர்யா 11 பந்துகளில் 39 ரன்கள் குவித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 43 ரன்களும், குப்பர் கான்லி 36 ரன்களும் சேர்த்து அணியை முன்னோக்கி நகர்த்தினர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்துகளில் 50 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இதையும் படிங்க: SA Vs AFG: சூப்பர் ஓவர் த்ரில்.. கடைசி வரை போராடிய ஆப்கானிஸ்தான்.. தென் ஆப்பிரிக்கா தெறி வெற்றி..!

சென்னைக்கு தொடர் சரிவு

இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டிய பஞ்சாப் அணி, முக்கியமான வெற்றியை பதிவு செய்தது. சென்னை தரப்பில் மேட் ஹென்றி, அன்ஷுல் கம்போஜ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து நடப்பு தொடரில் சென்னை அணி ஆடிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒருகாலத்தில் வலுவான அணியாக இருந்த சென்னை அணி தற்போது தொடர்ந்து சொதப்பி வருவது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சீசனிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சென்னை அணி கடந்த முறையும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில்தான் இருந்தது.

நடப்பு சீசனிலும் சென்னை அணி அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து தோற்பதால், சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தடுமாறிய டெல்லி அணி, அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#CSK vs PBKS #IPL 2026 #chennai super kings #Punjab Kings #Chepauk match
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story