×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிமுக கோட்டையில் இறங்கியடித்த விஜய்.. விமர்சனம் செய்யாதது ஏன்? தெறி பேச்சு.!

மக்களிடம் தோற்றுப்போன நபர்கள் குறித்து நாம் ஏன் பேச வேண்டும்? என விஜய் பேசினார்.

Advertisement

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் தோற்றுப்போன நபர்கள் குறித்து நாம் பேச தேவையில்லை. ஆட்சியை சரியாக நடந்ததாக நபர்கள் குறித்தே நாம் பேச வேண்டும் என விஜய் கூறினார்.

தமிழக தேர்தல் 2026:

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026ல் மாற்றத்தை கொண்டு வருவதாக, தேர்தலில் அரசியலில் ஈடுபட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இதுவரை பல ஊர்களுக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கரூர் துயர சம்பவத்துக்குப்பின் தவெக ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போது, மிகுந்த கவனத்துடன் அனைத்தையும் கையாண்டு வருகிறது. விஜய் வெளியிடும் அறிக்கைகள், பேச்சுக்கள் என ஆளும் மத்திய-மாநில அரசுகளை குறிவைத்தே இருக்கிறது. 

இதையும் படிங்க: TVK Velmurugan: திமுக கூட்டணியில் குழப்பம்... என்ன முடிவெடுக்கப்போகிறார் தவாக வேல்முருகன்?

சேலத்தில் முற்றுப்புள்ளி:

தமிழக அரசியல்களத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசும் விஜய், அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் குறித்து எதுவும் கருத்து தெரிவிப்பதில்லை. இது பாஜக, அதிமுகவுக்கு சாதகமான நிலை என பலரும் கூறி வைத்த நிலையில், இன்று சேலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் விஜய் இதுதொடர்பான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சேலத்தில் அவர் பேசியபோது, அதிமுகவை விமர்சிக்காதது ஏன் என விளக்கம் அளித்தார். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலம் மாவட்டத்தை பிடிக்க திமுக முயற்சித்து வரும் நிலையில், சேலத்தில் வைத்தே அதிமுகவை விமர்சிக்காதது ஏன்? என விஜய் பேசியது கவனம் பெற்றுள்ளது.

இருட்டடிப்பு செய்தவர்களை விமர்சிக்க வரவில்லை:

விஜய் பேசுகையில், "இந்த தேர்தலில் TVK Vs DMK இடையே தான் போட்டி. விஜய் திமுகவை மட்டும் எதிர்ப்பதாகவும், ஒருசில கட்சிகளை எதிர்த்து பேசவில்லை என்றும் கூறுகிறார்கள். யார் பொய் பேசி ஆட்சி நடத்துகிறார்கள், மக்கள் விரோத ஆட்சி செய்கிறார்களோ அவர்களை தான் விமர்சிக்க வேண்டும், அவர்களை எதிர்க்க வேண்டும். மக்கள் வேண்டாம் என கூறி இருட்டடிப்பு செய்த கட்சியை நாம் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்? விரோத அரசியல் செய்யவோ, வீண்வம்பு அரசியல் செய்யவோ நாம் வரவில்லை. 

நான் பற்றவைத்த அதிகார பங்கு நெருப்பு:

என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மக்களே. விஜயை நம்புறீங்களா? ஸ்டாலின் சாரை நம்புறீங்களா? என்பதுதான் முக்கியம். இதில் மக்களால் கைவிடப்பட்டவர்களை நாம் ஏன் பேச வேண்டும். TNPSC தேர்வை ரத்து செய்துவிட்டு தொழில்நுட்ப கோளாறு என சென்றுவிட்டார்கள். தேர்தலை ஒழுங்காக நடத்த தெரியவில்லை, இதில் உலக நாடுகளுடன் போட்டி என விளம்பரம் தேவையா? தேர்தலுக்குப்பின் வரப்போவது நமது ஆட்சி. சமூகநீதிக்கான ஆட்சியை அமைப்போம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை நான் கூறினேன். இந்த விஷயம் அனைத்து கூட்டணியிலும் எதிரொலித்துள்ளது. ஸ்டாலின் ஆட்சி-அதிகாரத்தில் பங்கு கிடையாது என அவர்களின் கூட்டணிக்கு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அவர்களைப்பொறுத்தவரையில் தேர்தல் வெற்றிக்கு மட்டுமே கூட்டணி" என பேசினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #TVK Vijay #AIADMK #தவெக விஜய் #அதிமுக
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story