×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

TVK Velmurugan: திமுக கூட்டணியில் குழப்பம்... என்ன முடிவெடுக்கப்போகிறார் தவாக வேல்முருகன்?

DMK Alliance in Trouble? TVK Velmurugan Plan: திமுக தலைமையின் ஒருசில முடிவுகள், தவாக தலைவர் வேல்முருகனை அதிருப்தியில் ஆழ்த்தி இருப்பதால் கூட்டணியை மாற்றிக்கொள்ளலாமா? என அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

தமிழக வாழ்வுரிமை கட்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முடிவால் அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026ஐ முன்னிட்டு, தேர்தல்களம் விறுவிறுப்பை அடைந்துள்ளது. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தங்களின் கூட்டணியை வலுப்படுத்தி வருகின்றன. தமிழக அரசியலில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்ற தேமுதிக கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கிறது. இரண்டாக உடைந்துள்ள பாமகவில் ராமதாஸ் தரப்பின் நிலையும் புதிராக உள்ளது. இவற்றை தவிர்த்து பிற சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

தமிழக வாழ்வுரிமை கழகம் போர்க்கொடி?

திமுக கூட்டணியை பொறுத்தவரையில், கடந்த சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை போல காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இஸ்லாமிய கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் சிறிய கட்சிகள் எனப்படும் வகையில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கழகம் தற்போது புதிய புயலை அரசியலில் கிளப்பி விட்டுள்ளது. இது திமுக கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது திமுக தலைமை இந்த பிரச்சனையை சாதாரணமாக எதிர்கொண்டு அமைதியாக முடித்து வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: BREAKING: டெல்லி கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவித்த காங்கிரஸ் கட்சி! பரபரப்பில் அரசியல் களம்!

மா.செக்களுக்கு சம்மதம்?

அதாவது, தமிழீழ விடுதலை பொதுவாக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு, 10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு என திமுக தலைமையிடம் தவாக தலைமை வைத்த கோரிக்கைகள் எதுவும் தற்போது வரை திமுக அரசால் செயல்படுத்தப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் இல்லை என தவாக நினைக்கிறது. இதனால் திமுக கூட்டணியிலேயே இருக்கலாமா? வேறு கூட்டணி குறித்து முடிவு எடுக்கலாமா? என தவாக தலைமை மா.செ கூட்டத்தில் கேட்டதாக கூறப்படுகிறது. மா.செக்களும் கூட்டணி மாற்றும் விஷயத்துக்கு பச்சைக்கொடி காண்பித்ததாக சொல்லப்படுகிறது.

ஒரு தொகுதிக்காக எவ்வுளவு போராடுவது?

அதேநேரத்தில், 2001 தேர்தல் வடமாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் கட்சியை விரிவுபடுத்திய தமிழக வாழ்வுரிமை கட்சி, தேர்தல் வெற்றி வாய்ப்பிலும் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. திமுக கூட்டணி பிரித்து வழங்கும் ஒரு தொகுதிக்காக தொடர்ந்து போராடி வருகிறது. திமுக கூட்டணியில் இடம்பெறும் ஒருசில குறிப்பிட்ட பகுதியில் மட்டும் செல்வாக்கு வைத்துள்ள கட்சிகளுக்கும் திமுக ஒரு தொகுதி ஒதுக்கி கொடுக்கிறது.

துரோகம் செய்யாதவர்களுடன் இணைவதில் தவறில்லை?

தவாகவை பொறுத்தவரையில் கடலூர் உட்பட டெல்டா மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்திலும் பலம்பொருந்திய கட்சியாக குறிப்பிட்ட வாக்குகளை கொண்டுள்ளது. இந்த கட்சிக்கு ஒருதொகுதிக்கு ஏன் நிற்க வேண்டும் என தவாக மா. செக்கள் தலைமையிடமும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் செய்த காங்கிரஸ் திமுக கூட்டணியில் இடம்பெற்றபோது, நாமும் அங்கு இருக்கிறோம். பாஜக அதுபோன்ற தவறு செய்யவில்லை. விஜயின் தவெகவுடன் கொள்கை மட்டுமே பிரச்சனை. அவர்களுடன் இணைவதில் என தவறு என்ற மனநிலையிலும் கட்சியினர் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் வேல்முருகன் எடுக்கப்போகும் முடிவை பொறுத்து திமுக கூட்டணியில் மாற்றம் உண்டாகும். ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறினால், அது திமுக கூட்டணிக்கு இழப்பாகவே இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
 

இதையும் படிங்க: VK Sasikala: புதிய கட்சியா? தம்பி கட்சியா? தமிழக அரசியலில் புதிய புயல்.. சசிகலாவின் முடிவு என்ன?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #Dmk alliance #TVK Velmurugan #தவாக #வேல்முருகன் #திமுக கூட்டணி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story