×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: தமிழகத்தில் உதயமானது புதிய கட்சி.. பெயர் என்ன தெரியுமா? வி.கே. சசிகலா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

VK Sasikala: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் உடைந்துபோன அதிமுகவில், தற்போது புதிய கட்சி உதயமாகியுள்ளது.

Advertisement

சசிகலா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.

உடைந்துபோன அதிமுக:

அதிமுக உடைந்துபோன பின் டி.டி.வி. தினகரனுடன் அரசியல் பயணத்தை தொடங்கிய சசிகலா, தற்போது புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், கடந்த பிப்.24ம் தேதி கட்சியின் சின்னத்தை அறிமுகம் செய்த சசிகலா, அதனைத்தொடர்ந்து மார்ச் 13ம் தேதியான இன்று கட்சியின் பெயரை அறிவித்தார்.  

இதையும் படிங்க: VK Sasikala: புதிய கட்சியா? தம்பி கட்சியா? தமிழக அரசியலில் புதிய புயல்.. சசிகலாவின் முடிவு என்ன?


 
கட்சியின் பெயர் அறிவிப்பு:

இதுதொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த வி.கே. சசிகலா, "திமுக ஆட்சியில் மக்கள் பல துயரங்களை சந்திக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பற்றுக்கொண்ட தொண்டர் ஆரம்பித்த கட்சியில் நான் என்னை இணைத்து அதில் பயணம் செய்கிறேன். அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியில் நான் இணைந்து பயணிக்கிறேன்" என தெரிவித்தார். 

அதிமுக கூட்டணிக்கு இழப்பு:

தேர்தல் நேரத்தில் சசிகலா எடுத்துள்ள முடிவு தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பி இருக்கிறது. இதனால் டிடிவி தினகரன் - சசிகலா இணைந்து வரும் வாக்குகள் பிரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவின் முடிவு டி.டி.வி. தினகரனுக்கும், பாஜக-அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் சிறிய அளவிலான தலைவலியை உண்டாக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

இதையும் படிங்க: தவெகவுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sasikala #AIADMK #TN politics #விகே சசிகலா #அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story