×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விரக்தியில் விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு.... "எல்லாம் சேர்ந்து சதி பண்ணிட்டாங்க". ஆட்சி அமைக்கும் முடிவை திடீரென கைவிட்ட விஜய்? மக்களின் நிலை என்ன.?

ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறிக்கிடையே, தவெக தலைவர் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

Advertisement

தமிழக அரசியல் களத்தில் ஆட்சி அமைப்பைச் சுற்றிய பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இன்னும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் உள்ளது. இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் தனது முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை இரண்டு முறை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தாலும், பெரும்பான்மை குறித்த தெளிவான ஆதாரம் தேவைப்படுவதாக ஆளுநர் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள விஜய், ஜான் ஆரோக்கியசாமி, புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் நீண்ட ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ரகசிய டீல்....விஜய்க்கு ஆளுநர் கொடுத்த சீக்ரெட் பிராமிஸ்..! அந்த ஒரு வார்த்தையால் நிம்மதியாக கிளம்பிய விஜய்!!!

திமுக - அதிமுக - பாஜக மீது குற்றச்சாட்டு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தங்களுக்கு எதிராக திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மறைமுகமாக செயல்படுகின்றன என்று விஜய் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. “ஆட்சி அமைக்க உரிமை கேட்பதை நிறுத்திவிடலாம். யாரால் முடியுமோ அவர்கள் ஆட்சி அமைக்கட்டும். இல்லையெனில் ஆளுநர் ஆட்சியே வரட்டும்” என்று அவர் விரக்தியுடன் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜனநாயகத்தை பற்றி தொடர்ந்து பேசும் திமுக, ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து அமைதியாக இருப்பது இரட்டை நிலைப்பாடு எனவும் விஜய் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

விசிக - இடதுசாரி ஆதரவில் ஏற்பட்ட தயக்கம்

விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆரம்பத்தில் ஆதரவு அளிக்க முன்வந்ததாகவும், ஆனால் பின்னர் திமுக தரப்பிலிருந்து ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவர்கள் தயக்கம் காட்டுவதாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, ஆளுநரின் ‘நம்பிக்கை’ மற்றும் ‘திருப்தி’ என்ற விளக்கங்களை பயன்படுத்தி டெல்லி மேலிடம் அரசியல் அழுத்தம் கொடுக்க முயல்கிறது என்றும், சட்ட ரீதியாக தவெகவை சிக்கலில் வைக்க முயற்சி நடக்கிறது என்றும் நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

“மறு தேர்தலுக்கும் தயார்” என விஜய் ஆவேசம்

இதையடுத்து, மூத்த நிர்வாகிகள் விஜய்யை சமாதானப்படுத்த முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப் போராட்டம் மூலமாகவோ அல்லது மக்கள் மன்றத்தில் மீண்டும் ஆதரவை பெறுவதன் மூலமாகவோ இந்த சிக்கலை எதிர்கொள்ளலாம் என அவர்கள் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், “தைரியம் இருந்தால் மறு தேர்தல் நடத்தட்டும். மக்களைச் சந்திக்க நாங்கள் தயார்” என்று விஜய் ஆவேசமாக தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தற்போது தவெகவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதே தமிழக அரசியலில் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: மெஜாரிட்டி இருக்கா? அது வெறும் டிராமா.. பின்னணியில் யாரு..? ஆளுநரின் முடிவுக்கு எதிராக.... விஜய்க்கு ஆதரவாக தமிழகத்தில் திரலும் புதிய புரட்சி.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #TVK #Tamil Nadu Politics #governor #2026 Election
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story