#Breaking : பதவி விலகினார் முதல்வர் விஜய்.!
#Breaking : பதவி விலகினார் முதல்வர் விஜய்.!
தமிழக அரசியலில் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், அவர் எடுத்துள்ள அடுத்தடுத்த அரசியல் முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த விஜய், தற்போது திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இரண்டு தொகுதிகளையும் தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்வது அவசியமாக இருந்தது. இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி பதவியை அவர் காலி செய்துள்ளார்.
இதன் மூலம் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக விஜய் தொடர்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. தனது அரசியல் பயணத்தின் முக்கிய மையமாக பெரம்பூரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அங்குள்ள மக்களுடன் தொடர்ந்து நேரடி தொடர்பில் இருக்க விரும்புவதாகவும் கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதை தொடர்ந்து அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. அந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் பெயர்கள் இதற்காக பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சராக பதவியேற்ற அதே நாளில் விஜய் எடுத்த இந்த அதிரடி அரசியல் முடிவு தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: #Breaking : டெல்லிக்கு புறப்பட்ட சிவி சண்முகம்.! அடுத்தடுத்து நடக்கவுள்ள அதிரடிகள்.!