×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking : டெல்லிக்கு புறப்பட்ட சிவி சண்முகம்.! அடுத்தடுத்து நடக்கவுள்ள அதிரடிகள்.!

#Breaking : டெல்லிக்கு புறப்பட்ட சிவி சண்முகம்.! அடுத்தடுத்து நடக்கவுள்ள அதிரடிகள்.!

Advertisement

அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவி சண்முகம் தற்போது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்காக அவர் அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனை இன்று இரவு நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்ளும் சூழலில் ஒரே நேரத்தில் 2 பதவிகளை வகிக்க முடியாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக தலைமையுடன் தொடர்ந்து ஆலோசனையில் இருந்து வரும் சிவி சண்முகம் கடிதத்தை வழங்கியதும் உடனடியாக புதுச்சேரிக்குப் புறப்பட திட்டமிட்டுள்ளார். அங்கு தங்கி இருக்கும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்து முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நம்ப ஒன்னு நினைச்சா அது ஒன்னு நடக்குது! அடுத்தடுத்த அதிர்ச்சியில் EPS! பாஜகவில் இணையும் அதிமுகவின் முக்கிய புள்ளி! பலம் அதிகமாகும் பாஜக!

சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் சிவி சண்முகத்தின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கட்சியின் அடுத்த கட்ட அரசியல் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் மாநில அரசியலில் வலுவான இடத்தை பிடித்துள்ள சிவி சண்முகம் தற்போது அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்படுகிறார். அவரது டெல்லி பயணம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள சந்திப்புகள் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு! புதிய கட்சி அறிவிப்பு..? ஓபிஎஸ் எடுத்த இறுதி முடிவு...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cv Shanmugam #delhi #mla #Admk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story