BREAKING : அப்படி இப்படின்னு ஆதரவு கட்சிகளை திரட்டி... ஆளுநரை சந்தித்த விஜய்! அரங்கேரிய அரசியல் களத்தின் "க்ளைமாக்ஸ்" காட்சி...!!!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்து ஆதரவு கடிதங்களை வழங்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்த பரபரப்புக்கு இன்று முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து ஆளுநரை நேரில் சந்தித்தார். ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஆளுநர் மாளிகையில் பரபரப்பு
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தவெக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். தகவலின்படி, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டணியின் மொத்த பலம் 118 எம்.எல்.ஏ.க்களை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆட்சி அமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன. விஜய் புன்னகையுடன் ஆளுநரை சந்தித்த புகைப்படங்கள் அவரது ஆதரவாளர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளன.
வைரலாகும் சந்திப்பு புகைப்படங்கள்
ஆளுநருடன் நடைபெற்ற சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் அவை தீவிரமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றிய காட்சி, தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, நாளை நடைபெறலாம் என கூறப்படும் பதவியேற்பு விழா குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: நாளை விஜய் முதல்வராக பதவியேற்கிறார்....! பெரும் உற்சாகத்தில் தொண்டர்கள்!!!