×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: நாளை விஜய் முதல்வராக பதவியேற்கிறார்....! பெரும் உற்சாகத்தில் தொண்டர்கள்!!!

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோர ஆளுநரைச் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியான தகவலால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலின்படி, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரைச் சந்தித்த விஜய்

இந்த அரசியல் நகர்வைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு ஆட்சியமைக்க உரிமை கோரி அவர் மனு அளித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

இதையும் படிங்க: திக் திக் நிமிடங்கள்....ஆளுநர் மாளிகையில் தெரியப்போகும் 3 மணி க்ளைமாக்ஸ்! விஜய்யின் கையில் இருக்கும் அந்த 'ரகசிய' கடிதம்.! நேரு ஸ்டேடியத்தில் தீவிர ஏற்பாடுகள்....!!!

இதனால் சென்னை அரசியல் களம் திடீரென சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்களும் தற்போதைய சூழலை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

விசிக ஆதரவு பற்றிய தகவல்

இதற்கிடையில், விசிக கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய்யின் பலம் மேலும் உயர்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், நாளை பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் முதல்வராகப் பதவியேற்கலாம் என்ற பேச்சு அவரது ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING : அடி தூள்.....விஜய்யுடன் கையை கோர்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...! இனி கோட்டையை ஆளப்போவது தவெக தலைவர் விஜய் தான்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #TVK #தமிழக அரசியல் #Congress Support #Vck
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story